நீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்!

நீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்!

இணைதளங்களை முடக்கும் ஹேக்கிங் கில்லாடிகளைப் பற்றி ஆச்சிரியப்படும் பலருக்கும் தாங்களும் அப்படி ஹேக்கிங்கில் கலக்க முடிந்தால் எப்படி இருக்கும்? என்று ஆசை இருக்கும். அதற்கு உதவ எளிமையான அப்ளிகேஷன்கள் உள்ளன. அவற்றை பயன்படுத்தத் தெரிந்தால் நீங்களும் ஹேக்கர்தான்!

நீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்!

Temp Mail - Temporary Email – சில இணையதளங்களில் ஏதாவது டவுண்லோட் செய்ய விரும்பினால் உங்கள் ஈ-மெயில் முகவரியைக் கொடுக்க வேண்டும் என்று கேட்கும். அப்படி கொடுத்துவிட்டால், தொடர்ந்து அந்த இணையதளத்திலிருந்து உங்களுக்கு எக்கச்சக்க ஸ்பேம் மெயில் வந்து குவியும். அதைத் தவிர்க்க இது உதவும். இந்த அப்ளிகேஷன் தற்காலிகமான மின்னஞ்சல் முகவரிகளைக் கொடுக்கும். டவுண்லோடு செய்வது போன்ற காரணங்களுக்காக ஈ-மெயில் முகவரியைக் கேட்கும் இணையதளங்களுக்கு இந்த தற்காலிக மின்னஞ்சல் முகவரியைக் கொடுக்கலாம். பின், இந்த அப்ளிகேஷன் மூலமாக அந்த மின்னஞ்சல் முகவரிக்கு வரும் மின்னஞ்சலைப் பார்வையிடலாம்.

நீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்!

Orbot: Proxy with Tor – நீங்கள் பார்க்கும் இணைதளங்கள் உங்களைப் பற்றிய இடம், ஐபி முகவரி (IP Address), மொபைல் ஐஎம்ஈஐ (IMEI) எண் போன்ற எந்தத் தகவலையும் திருடவிடாமல் பாதுகாக்க இந்த அப்ளிகேஷன் உதவும். இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை அழுத்திவிட்டு பிரவுஸ் செய்தால் இணையதளத்தில் உங்கள் அடையாளத்தை முழுமையாகப் பாதுகாக்கும்.

நீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்!




































Edit Webpage – எந்த இணையதளத்தில் உள்ள தகவலையும் நீங்கள் எளிதாக மாற்றிவிட இந்த அப்ளிகேஷன்போதும். இதில் ஒரு இணையதளத்தைத் திறந்து, மேலே இருக்கும் பென்சில் குறியை க்ளிக் செய்தால், அந்த இணையதளத்தில் உள்ள எந்த எழுத்துக்களையும் நீங்கள் மாற்றலாம்.

நீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்!
Fly GPS-Location fake/Fake GPS – இந்த அப்ளிகேஷன் ஜிபிஎஸ் (GPS) மூலம் அறியப்படும் உங்கள் இருப்பிடத்தை மாற்ற உதவும். இதில் உள்ள மேப்பில் நீங்கள் அமெரிக்காவில் இருப்பது போல செட் செய்துவிட்டு, டேக்சி புக் செய்ய ஓலா, உபெர் போன்ற அப்ளிகேஷன்களைத் திறந்தால் அதில் அமெரிக்காவில் நீங்கள் குறித்த இடத்திற்கு அருகில் உள்ள கார்களைக் காட்டும்.

நீங்களும் ஈசியாக ஹேக்கர் ஆகலாம்!
CrookCatcher - Anti Theft - ஹேக்கிங் செய்ய பழகுபவர்கள் ஹேக்கிங்கில் இருந்து தப்புவதையும் தெரிந்துகொள்வதும் அவசியம். அதற்கு உதவுவதுதான் இந்த அப்ளிகேஷன். லாக் செய்த உங்கள் மொபைலை யாராவது பயன்படுத்த முயன்றால் அவரது புகைப்படம், இடம் உள்ளிட்ட தகவல்களை மின்னஞ்சல், எஸ்.எம்.எஸ் மூலம் உங்களுக்கு அனுப்பும்.


























































































Post a Comment

0 Comments