உங்களது ஸ்மார்ட்போனில் சிக்னலை பூஸ்ட் செய்வது எப்படி…?

நமது அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போனும் ஒரு அங்கமாக மாறிவிட்டது, ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு இதன் பயன்பாடு அதிகரித்துவிட்டது.
ஸ்மார்ட்போன் சிறப்பாக இயங்க நெட்வொர்க் மிக அவசியம், நம்மில் பலருக்கு நெட்வொர்க் பிரச்னை ஏற்படும் போது உலகே இருண்ட நிலைக்கு தள்ளப்படுவர்.
1 - ஸ்மார்ட்போன் ஆன்டெனா
நெட்வொர்க் சரியாக கிடைக்கவில்லை எனில் கால் தரம் குறையும், இணையம் வேகமாக பயன்படுத்த முடியாது. நினைத்த நபருக்கு கால் மேற்கொள்ள முடியாது.
இன்றைய நவீன உலகில் நெட்வொர்க் மிக அவசியமான ஒன்று, சரி இந்த நெட்வொர்க் பிரச்சனைகளை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்று வாருங்கள் பார்க்கலாம்.
ஸ்மார்ட்போன் ஆன்டெனா:-
உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க நீங்கள் பயன்படுத்தும் கவர் அலல்து கேஸ் சில சமையங்களில் உங்கள் ஸ்மார்ட்போனின் சிக்னலை பாதிக்கலாம். இது போன்ற பிரச்சனைகள் பொதுவாக தடிமனான கேஸ் உபயோகப்படுத்தும் போது தான் ஏற்படுகிறது.
எனவே மொபைல் போனின் ஆண்டனாவை உங்கள் மொபைல் கேஸ் மறைக்காமல் இருக்கும் படி பார்த்து கொள்ளவும்.
நெட்வொர்க் இடையூறுகள்:-
பெரும்பாலும் நமது மொபைலுக்கு வரும் நெட்வொர்க் பல தடைகளை தாண்டி தான் நமது மொபைலை வந்து சேரும். ஆவ்வாறான சூழ்நிலையில் நாம் கொஞ்சம் அந்த இடையூறுகளை தடுக்கலாம்.
உதாரணமாக ஜன்னல் அருகே மொபைலை வைப்பது, அதிக பரபளவு கொண்ட இடத்திற்கு செல்வது, இரும்பு அல்லது சிமின்ட் சுவர் அருகே இல்லாமல் இருப்பது, மின்சாதனங்கள் அருகில் இருந்து மொபைலை தள்ளி வைப்பது, போன்றவற்றின் மூலம் நெட்வொர்க் இடையூறுகளை தடுக்கலாம்.
மேலே கூறியவாறு இதுபோன்ற இடையூறுகளை தடுப்பதன் மூலம் சீரான நெட்வொர்க்கை பெற முடியும் .
மொபைல்போன் பேட்டரி:-
பொதுவான நமது ஸ்மார்ட்போனில் உள்ள பேட்டரி நெட்வொர்க் தேடுவதானால் தான் குறைகிறது., இதனை தவிர்க்க ஸ்மார்ட்போன் தயாரிக்கும் நிறுவனங்கள் பேட்டரி குறைவாக இருக்கும் சூழ்நிலையில் நெட்வொர்க் தேடும் வேகம் குறைவாக இருக்கும் படி தயாரிப்பார்கள்.
எனவே உங்கள் பேட்டரி குறைவாக இருக்கும் போது நெட்வொர்க் தடை ஏற்படும். இதனை தடுக்க உங்கள் போனில் போதுமான அளவு பேட்டரி இருக்கும் படி பார்த்து கொள்ளவும்.
சிம் கார்டை சரிபார்த்தல்:-
நீங்கள் உங்கள் போனில் போட்டுள்ள சிம் பழுதடைந்தாலும் நெட்வொர்க் பிரச்சனை வரலாம், உங்களது சிம் கார்டின் தரம் பொறுத்து தான் நெட்வொர்க் இருக்கும்.
குறிப்பிட்ட நாள் இடைவெளியில் உங்கள் சிம் கார்டை கழற்றி சுத்தம் செய்து மீண்டும் போடலாம் இதன் மூலம் நெட்வொர்க் சீராக கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் நீண்ட வருடமாக ஒரே சிம் பயன்படுத்துகிறீர்கள் எனில் அந்த சிம்மை நீக்கி விட்டு புதிய சிம் கார்டு பயன்படுத்தவும் .
5 - 2ஜி / 3ஜி நெட்வொர்க்
2ஜி / 3ஜி நெட்வொர்க்:-
இன்று அனைவரும் 4G நெட்வொர்க் தான் பயன்படுத்தி வருகின்றனர், அதே சமையம் இந்தியாவின் அணைத்து இடங்களிலும் இன்னும் இந்த 4G சேவை முழுதாக கிடைக்கவில்லை.
எனவே 4G சேவை இல்லாத இடங்களில் உங்கள் போனில் 2ஜி / 3ஜி நெட்வொர்க் மோட் வைத்து பயன்படுத்தவும்.
ஆன்ட்ராய்டு போனில் செட்டிங்ஸ் சென்று–> கனெக்ஷன் செட்டிங்ஸ் –> மொபைல் நெட்வொர்க்ஸ் –> நெட்வொர்க் மோட் –> 2G / 3G ஆப்ஷனை தேர்வு செய்யலாம்.

Post a Comment

0 Comments