தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் வாட்ச் என ஏராளமான கெஜெட்ஸ் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் லுமிவாட்ச்(Lumiwatch) எனப்படும் ஸ்மார்ட் வாட்ச் குறித்து இங்கே காணலாம்.
கார்னீஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தைச் (Carnegie Mellon University) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் லுமிவாட்ச்சை உருவாக்கியுள்ளனர்.
இதில் சிறிய ரக புரொஜக்டர் இணைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்து வெளிவரும் ஒளிக்கற்றை கையின் மீது படும் வகையில் அமைந்துள்ளது. இதன்மூலம் கையையே தொடு திரையாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஸ்மார்ட்வாட்ச்சில் இடம்பெற்றுள்ள சென்சார், உடலை தொடுதிரையாக மாற்றக்கூடிய தொழில்நுட்பத்தை வழங்குகிறது. இதில் ஆண்ட்ராய்டு 5.1 இயங்குதளம் செயல்படுகிறது.
0 Comments