நீங்கள் இறந்த பிறகு உங்கள் பேஸ்புக் கணக்கு என்ன ஆகும் என்று தெரியுமா?

பேஸ்புக் மீதான ஈர்ப்பு வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவரிடமும் அதிகரித்துள்ளது. உலகளவில் மிக பிரபலமான சமூக வலைத்தளம் என்றால் அது பேஸ்புக் தான்.
மரணத்தின் பின்னும் வாழு.!
ஒருசிலர் ஒவ்வொரு நாளும் பேஸ்புக்-கில் ஒரு புதிய புகைப்படத்தை இணைத்து அதற்கு லைக் வாங்க வேண்டும் என்ற எண்ணத்துடன் பேஸ்புக் பயன்படுத்துகின்றனர், வேறுசிலர் தினம் தினம் புது புது நண்பர்களை கண்டுபிடிக்கவேண்டும் என்றும், சிலர் புதிய தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும் என்று பல விதத்தில் இந்த பேஸ்புக்-கை பயன்படுத்தி வருகின்றனர்.
ஆகமொத்தம் இந்த பேஸ்புக் நல்ல பொழுது போக்கும் கருவியாக மக்களிடம் மாறிவிட்டது. இத்தகைய பேஸ்புக், இன்னும் சில விந்தையான விசயங்களை தனக்குள் வைத்துள்ளது. ஆம், நீங்கள் இறந்த பிறகு உங்கள் பேஸ்புக் கணக்கு என்ன ஆகும் என்று என்றாவது யோசித்தது உண்டா?
அதெப்படி சாத்தியம்.?
நீங்கள் இறந்த பிறகும் உங்கள் பேஸ்புக் என்ன ஆகும், அதனை யார் நிர்வகிக்கலாம், அதனை எவ்வாறு செய்வது என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.
நீங்கள் இறந்த பிறகும் உங்கள் நண்பர்களோ அல்லது உங்கள் குடும்பத்தினரோ உங்கள் பேஸ்புக் கணக்கை உங்கள் நினைவாக பயன்படுத்த முடியும்.
நீங்கள் இறந்து விட்டீர்கள் என்பதை பேஸ்புக் எவ்வாறு அறியும் என்றால், அதனை உங்கள் குடும்பத்தினரோ அல்லது நண்பர்களோ தான் பேஸ்புக்கிற்கு தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் அந்த கணக்கை உங்கள் நினைவாக அவர்கள் தொடர்ந்து நிர்வகிக்கலாம்.
உங்கள் மரணத்திற்கு பிறகு உங்கள் பேஸ்புக் கணக்கை உங்கள் நண்பர்களோ அதனை நிர்வகிக்க உங்கள் பேஸ்புக் கணக்கின் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் தெரிந்திருக்க அவசியம் இல்லை. அதைனை பேஸ்புக் நிறுவனத்தின் லேகசி காண்டாக்ட் (Legacy Contact) என்பதன் மூலம் செய்ய முடியும்.
இதற்கு நீங்கள் தான் ஒப்புதல் அளிக்க வேண்டும் ஆம், நீங்கள் உயிருடன் இருக்கும் போதே இதனை செய்ய வேண்டும், நீங்கள் இறந்த பிறகு உங்கள் கணக்கை யார் நிர்வகிக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்து அவர்களை நியமிக்க வேண்டும்.
லேகசி காண்டாக்ட்டை நியமிப்பது எப்படி.? (வழிமுறைகள்)
லேகசி காண்டாக்ட்டை நியமிப்பது எப்படி.? 
– முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கின் செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும்.
– அங்கு ஜெனரல் பகுதியை கிளிக் செய்யவும்.
– ஜெனரல் பகுதியில் மேனேஜ் அக்கவுன்ட் என்பதை கிளிக் செய்யவும்.
– அதில் செலக்ட் லெகசி காண்டாக்ட் என்ற ஆப்சன் இருக்கும் அதில் நீங்கள் இறந்த பிறகு உங்கள் கணக்கை யார் பயன்படுத்தவேண்டுமோ அவரது பெயரை இணைக்கவும்.
– அவ்வளவு தான் நீங்கள் லெகசி காண்டாக்ட்-ல் இணைத்த நபர் நீங்கள் இறந்த பிறகு உங்கள் நினைவாக உங்கள் கணக்கை நிர்வகிக்க முடியும்.
யார் மேனேஜ் செய்ய வேண்டும்.?
நீங்கள் இறந்த பிறகு உங்கள் கணக்கை யாரும் பயன்படுத்த தேவை இல்லை அதில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் அதற்கும் ஒரு வழி உள்ளது ஆம்.
மேலே குறிபிட்டுள்ள அதே வழிமுறையில் லெகசி காண்டாக்ட்-ஐ செலக்ட் செய்வதற்கு பதில் அதில் கீழே உள்ள ரெக்வஸ்ட் அக்கவுண்ட் டெலிஷன் (Request account deletion) என்பதை கிளிக் செய்யவும். அவ்வளவு தான் அதில் நீங்கள் இணைத்த நபர் நீங்கள் இறந்த பிறகு உங்கள் பேஸ்புக் கணக்கை எளிதில் டெலிட் செய்யலாம்.
மேலே குறிபிட்டுள்ள வழிமுறைகள் மூலம் நீங்கள் அதிகம் விரும்பும் உங்கள் பேஸ்புக்கை நீங்கள் இறந்த பிறகும் உங்கள் நினைவாக பயன்படுத்த முடியும். இவ்வளவு நாள் உங்களுக்கு இருந்த குழப்பம் தீர்ந்தது என்று நம்புகிறோம், மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு எங்களுடன் இணைந்திருங்கள்.

Post a Comment

0 Comments