தொழில்நுட்பம் பெருகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் ஆபாச படங்கள் பார்ப்பது எளிதாகிவிட்டது. கையில் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு போன்., லேப் டாப், கம்ப்யூட்டர் மூலம் ஆபாசப்படங்கள் பார்ப்பது தற்போது அதிகரித்துவிட்டது.
மற்றோரு பக்கம் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நமது தகவல்களை திருடும் வேலையும் நடந்து கொண்டிருக்கிறது. இது போன்ற வேலைகளை ஆபாச இணையதளங்கள் மூலம் சிலர் செய்து வருகின்றனர்.
ஆபாச படம் பார்ப்பதற்கும்., நமது கம்ப்யூட்டர்/செல்போன்-ல் உள்ள தகவல்கள் திருடப்படுவதற்கும் என்ன சம்மந்தம் என்கின்ற கேள்வி எழுகிறதா..? அப்படியாக, ஆண்ராய்டு போனில், ஏன் ஆபாச படம் பார்க்க கூடாது என்பதற்கான 4 காரணங்கள்
காரணம் 1 : சட்டவிரோத வாஸ் சந்தாக்களுக்கு வழிவகுக்கும் (illegal VAS subscriptions)
பெரும்பாலான ஆபாச வலைத்தளங்கள் இலவசமாகத் தான் பெறப்படுகின்றன. இதனை பயன்படுத்தி சில வலைத்தளங்கள் லாபம் பார்க்க சட்ட விரோதமான சட்டவிரோத வாஸ் சந்தாக்களை நடைமுறைப் படுத்தலாம்.பின்பு நீங்கள் உங்கள் ஆண்ராய்டு போன் வழியாக குறிப்பிட்ட வலைதளத்தை கிளிக் செய்தாலே போதும் வாஸ் சந்தா ஆட்டோமட்டிக்காக செயல்படத் தொடங்கிவிடும்.
காரணம் 2 : மேலும் பல டிக்கர்ஸ்களை ஈர்க்கும் (Attracts more porn tickers)பார்ன் டிக்கர்ஸ்
அதாவது போலியான ஆண்ராய்டு ஆப்ஸ்கள், ஆபாசப் படங்கள் அனுகலாம் என்று உள்ளே நுழைந்தால் நீங்கள் கிளிக் செய்யும் அனைத்திற்கும் பின்னாலும் எதோ ஒரு கேம் எதோ ஒரு ஆப் டவுன்லோட்டிங் இருக்கும்.
காரணம் 3 : பெரிய அளவிலான செக்யூரிட்டி ரிஸ்க் (Huge security risks)
உங்கள் வங்கி மற்றும் இதர பெர்சனல் விடயங்களுக்கான ஜிமெயில் ஐடி மூலம் ஆபாச வலைதளங்களை அணுகினால் நீங்கள் பெரிய அளவிலான சைபர் குற்ற சம்பவங்களில் சிக்க வாய்ப்புள்ளது.
காரணம் 4 : ரான்சம்வேர்ஸ் (Ransomwares)
ஒன்றை நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும் ஆன்லைனில் எதுவுமே இலவசம் இல்லை, எல்லாவற்றிக்கும் பின்னாலும் ஒரு வியாபாரம் இருக்கிறது. அப்படியான ஒன்று தான் ரான்சம்வேர்ஸ் எனப்படும் மால்வேர்.
இதுபோன்ற மால்வேர்கள் ஒரு சாதனத்தை முழுமையாக ‘லாக்’ செய்துவிடும், பின்பு அதை ‘அன்லாக்’ செய்ய பயனாளியை குறிப்பிட்ட தொகையை செலுத்தும்படி கட்டாயப்படுத்தும்.
இது போன்ற முரட்டுத்தன்மான ரான்சம்வேர்ஸ் மால்வேர்கள் ஆபாச வாளைதலங்களில் மிகவும் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 Comments