ஆண்ட்ரய்டு ஸ்மார்ட்போனில் உள்ள இந்த ரகசியம் பற்றி தெரியுமா?

சமீப காலமாக மக்களிடையே ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஸ்மார்ட்போன் மீதான மோகம் சொல்லப்போனால் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

இருப்பினும் பெரும்பாலான பயனர்களுக்கு ஸ்மார்ட்போனுக்குள் ஒளிந்துள்ள பல அம்சங்கள் தெரிந்துகொள்ளவே இல்லை. இதன் காரணமாக அவற்றை பயன்படுத்தவும் முடிவதில்லை. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஒளிந்துள்ள ரகசியங்களை தெரிந்துகொண்டால் நீங்கள் மேலும் சிறப்பான அனுபவத்தை பெற முடியும்.

இதோ உங்கள் ஆண்ட்ராய்டு போனில் மறைந்துள்ள 8 சிறப்பம்சங்கள்.. இதனை தெரிந்துகொண்டு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் சிறப்பான அனுபவத்தை பெறுங்கள்.

அழைப்புகள்:-

நமக்கு தேவை இல்லாத அழைப்புகளை தவிற்பதற்கு “டோன்ட் டிஸ்டர்ப்” என்ற ஆப்சனை நாம் பெரும்பாலும் பயன்படுத்துவோம். ஆனால் இதில் மற்றொரு சிறப்பம்சம் ஒன்று உள்ளது. அதாவது நமக்கு பிடித்த அழைப்புகளை மட்டும் நமது போனில் நாம் பெற முடியும். இதனை செய்வதற்கு ‘பிரியாரிட்டி ஒன்லி’ என்ற ஆப்சனை பயன்படுத்தலாம்.

‘பிரியாரிட்டி ஒன்லி’ என்ற ஆப்சனின் மூலம் நாம் குறிப்பிட்ட சில போன் நம்பர்களை மட்டும் அதில் சேர்த்து கொள்ளலாம். இதன் மூலம் தேவை இல்லாத அழைப்புகளை தவிர்க்க முடியும்.

தானாக அன்லாக் செய்யும் வசதி:-

நம்பத்தகுந்த இடங்கள் பட்டியலில் உங்கள் வீட்டை இணைத்துவிட்டால், நீங்கள் வீட்டிற்குள் நுழைந்தவுடன் போன் தானாகவே அன்லாக் ஆகிவிடும். இந்த சிறப்பம்சமும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை..

இந்த சிறப்பம்சத்தை அனுபவிக்க உங்கள் வீட்டு முகவரியை கூகுள் நம்ப தகுந்த இடங்கள் வரிசையில் இணைக்க வேண்டும். முக்கியமாக உங்கள் ஜி.பி.எஸ்-ஐ ஸ்விட்ச் ஆன் செய்திருக்க வேண்டும்.

நாம் நமது ஸ்மார்ட்போனில் இன்டர்நெட் பயன்படுத்தும் நம்மை எரச்சல் ஊட்டும் ஒரு விஷயம் என்றால் தேவை இல்லாத விளம்பரங்கள் தான். இதனை எப்படி தவிர்ப்பது என்று பலருக்கும் தெரியாது.

இதனை எளிதில் தவிர்க்க முடியும் Settings -> Google -> Ads -> Enable ‘Opt out of Ads Personalization என்பதை எனேபிள் செய்வதன் மூலம். இதுபோன்ற விளம்பரங்களை தவிர்க்க முடியும்.

இதயத்தை கண்காணித்தல்:-

ஸ்மார்ட்போன் மூலம் நமது இதயத்துடிப்பை கண்காணிக்க முடியும். இதற்கு கூகுள் ப்ளே ஸ்டோரில் உள்ள ‘Instant Heart Rate’ என்ற செயலியை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

பின்னர் அந்த செயலியை இயக்கி கேமரா மீது உங்கள் சுட்டு விரலை வைப்பதன் மூலம் இதய துடிப்பை கணக்கிட முடியும்.

திரை உருப்பெருக்கியை பயன்படுத்துங்கள்:-

உங்களுக்கு கண்பார்வை குறைவாக இருந்தால், திரை உருப்பெருக்கி screen magnifierமிகவும் பயனுள்ளதாக இருக்கும். Settings-> Accessibility-> Magnification மூலம் இந்த வசதியை பயன்படுத்தலாம். இதன் மூலம் ஒரு விரலால் திரையை தொடுவதன் மூலம் திரையை பெரிதாக்க முடியும்.

இந்த சிறப்பம்சம் மூலம் கண் பார்வை குறைவாக இருந்தாலும் உங்களால் எளிதில் ஸ்மார்ட்போன் பயன்படுத்த முடியும்.

கெஸ்ட் மோடை பயன்படுத்துங்கள்:-

உங்கள் போனை மற்றவர்கள் பயன்படுத்த கொடுக்கும் போது உங்கள் போனில் உள்ள ‘கெஸ்ட் மோட்’ என்ற ஆப்சனை ஆன் செய்து கொடுக்கவும். இந்த மோடின் மூலம் உங்கள் போனில் உள்ள அனைத்து தகவல்களும் மற்றவர்களுக்கு தெரியாமல் மறைக்க முடியும்.

இதை பயன்படுத்த முதலில் நோட்டிவிக்கேசன் பாரை கீழே இழுத்து, உங்கள் ப்ரோபைலை கிளிக் செய்து ‘Add Guest’ ஐ தேர்வு செய்ய வேண்டும்.

Post a Comment

0 Comments