இன்ஸ்டாகிராம் ஸ்டோரிசை குறிப்பிட்டவர்களிடமிருந்து மறைக்க இதனை செய்யுங்கள்!!!

இன்றைய இளைய தலைமுறையினர் பெரும்பாலானோர் சமூக வலைதளங்களில் தான் தங்கள் பொழுதை களித்து வருகின்றனர். சொல்ல போனால் பேஸ்புக், இன்ஷ்டாகிராம், வாட்ஸ்ஆப் இவற்றை தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதிலும் குறிப்பாக சொல்ல போனால் இன்ஷ்டாகிராமில் அதிக நேரத்தை நாளொன்றுக்கு செலவிடுகின்றனர்.
இன்ஷ்டாகிராம்- ல் இளைஞர்களை கவரும் வண்ணம் பல சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதில் தங்கள் அன்றாட வாழ்வில் என்ன என்ன செய்து கொண்டு உள்ளனர் என்பதை மற்றவருக்கு தெரியபடுத்தும் விதமாக ஸ்டோரிஸ் என்ற ஒரு சிறப்பம்சம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்டோரிஸ் பகுதியில் ஒருவர் என்ன செய்து கொண்டு இருக்கிறார் என்பதை புகைப்படம் எடுத்தோ அல்லது எழுத்து மூலமோ வைத்து கொள்ள முடியும். இந்த ஸ்டோரிஸ் சரியாக 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடும்.
சரி நாம் வைக்கும் ஸ்டோரிசை நமது லிஸ்டில் உள்ள அனைவரும் பார்க்க முடியும். இந்நிலையில் குறிப்பாக நாம் போடும் சில விஷயங்களை குறிப்பிட்ட சிலர் பார்க்க கூடாது என்ற எண்ணம் வரும். ஆனால் என்ன செய்வது நமக்கு, அதனை எப்படி செய்வது என்பது தெரியாது. இனிமேல் அதனை நீங்கள் செய்ய முடியும்.
நீங்கள் வைக்கும் குறிப்பிட்ட ஸ்டோரிசை யார் யார் பார்க்க வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியும். பின்வரும் செயல்முறைகள் மூலம் இதனை நிகழ்த்த முடியும்.

ஸ்டெப்1: நீங்கள் ஒரு ஆண்ட்ராய்டு பயனராக இருக்கும்பட்சத்தில் மேலே வலது முனையில் உள்ள மூன்று புள்ளிகளை தட்டவும். நீங்கள் ஒரு ஐஓஎஸ் பயனராக இருக்கும் பட்சத்தில் செட்டிங்க்ஸ் பகுதிக்கு செல்லவும்.
ஸ்டெப் 2: அந்த பகுதியில் ஸ்டோரிஸ் செட்டிங் என்ற அமைப்பிற்கு செல்லவும்.
ஸ்டெப் 3: அதில் நீங்கள் உங்கள் ஸ்டிரிசை யார் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்க முடியும், மேலும் உங்கள் ஸ்டோரி-யை யாரும் பார்க்காத வண்ணமும் செய்ய முடியும்.
ஸ்டெப் 4: மேலும் ஸ்டோரிஸ் சிறப்பம்சத்தை பொறுத்தவரையில் 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடும் ஆனால் அதனை 24 மணி நேரத்திற்கு மேலும் அதனை மறையாமல் பார்த்து கொள்ள முடியும்.
ஸ்டெப் 5: ஸ்டோரி செட்டிங்க்ஸ் பகுதியின் கீழே ஆர்ச்சீவ் என்ற அமைப்பு இருக்கும் அதனை ஆன் செய்வதன் மூலம் உங்கள் ஸ்டோரிசை 24 மணி நேரத்தில் மறையாதவாறு வைக்க முடியும்.
ஸ்டெப் 6: இன்ஸ்டாகிராமில் “டைப் மோடு” என்ற மற்றொரு புதிய அம்சம் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம் எந்தப் படத்தையும் சேர்க்காமல், பயனருக்கு விருப்பமான காரியங்களை ஸ்டோரீஸில் டைப் செய்ய முடியும்.
ஸ்டெப் 7: இதுவும் ஸ்டோரிஸ் போலவே 24 மணி நேரத்தில் மறைந்து விடும்.
மேலே குறிபிட்டுள்ள செயல் முறைகளை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம்-ஐ இனிமேல் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் பயன்படுத்துங்கள்.

Post a Comment

0 Comments