ஸ்மார்ட்போன் இது நமது அனைவரின் வாழ்க்கையிலும் இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது, அதற்கு ஏற்றாற்போல் இதன் பயன்பாடுகளும் அதிகரித்து விட்டது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இதனை பாதுகாப்பாக கையாளுவது தான், காரணம் தவறுதலாக தண்ணீரில் விழுந்தாலோ, தரையில் விழுந்தாலோ அவ்வளவு தான். ஆனால் தற்பொழுது வரும் ஸ்மார்ட்போன்கள் பல பாதுகாப்பு அம்சங்களுடன் வருகிறது, தூசி தண்ணீர், அதிர்வு போன்றவற்றில் பாதிக்காத வண்ணம் வடிவமைக்கப்பட்டு வருகிறது ஆனால் இதுபோன்ற ஸ்மார்ட்போன்கள் சற்று விலை அதிகம். எந்த போனாக இருந்தாலும் தண்ணீரில் விழுந்தால் அதன் செயல்திறன் கண்டிப்பாக பாதிக்கப்படும், சரி தவறுதலாக ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால் பதட்டபடாமல் இதனை செய்யுங்கள்.
- ஸ்மார்ட்போன் தவறுதலாக தண்ணீரில் விழுந்துவிட்டால் பதட்டப்படாமல் முதலில் தண்ணீரில் இருந்து வெளியே எடுங்கள்.
- தண்ணீரில் இருந்த எடுத்த போனை முதலில் சுவிட்ச் ஆப் செய்யுங்கள். அப்படி சுவிட்ச் ஆப்-ஆகவில்லை என்றால் பவர் பட்டனை அழுத்தி பிடிங்கள் தானக சுவிட்ச் ஆப் ஆகிவிடும்.
- முக்கியமான விஷயம் தண்ணீரில் விழுந்த போனை மறந்தும் கூட சார்ஜ்-ல் போட்டுவிடாதீர்கள், காரணம் சார்ஜ் போடும் போது சார்ட் சர்க்யுட் ஆகி போன் வெடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளது.
- சிலர் போனில் உள்ள தண்ணீரை போக்க அடுப்பிலோ அல்லது மைரோவேவ் அவனிலோ வைப்பது உண்டு அப்படியும் செய்யாதீர்கள்.
- உங்கள் போனில் உள்ள பேட்டரி, சிம் போன்றவற்றை கழட்டி சூரிய ஒளியில் உலர விடவும், இரவு நேரமாக இருந்தால் விளக்கு வெளிச்சத்தில் உலர விடவும்.
- நன்றாக போன் உலர்ந்த பிறகு சுவிட்ச் ஆண் செய்து பார்க்கவும், அப்படி ஆண் ஆகவில்லை என்றால் சிரமம் பார்க்காமல் சர்வீஸ் செண்டர் கொண்டு செல்லவும் அவர்கள் சர்வீஸ் செய்து கொடுத்து விடுவார்கள்.
0 Comments