கை நிறைய சம்பாதிக்க உதவும் ‘எத்திக்கல் ஹேக்கிங்’ படிப்பு..!

படிப்பை முடித்து விட்டு அடுத்ததாக என்ன படிக்கலாம் என்று காத்துகொண்டிருக்கும் இளைஞர்கள் “ஹேக்கிங்” படிப்பை தேர்வு செய்யலாம். இது உங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை வழங்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
பணி என்ன?
நாம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வரும் சமூக வலைத்தளங்கள், மின்னஞ்சல், ஆன்லைன் வங்கி, போன்றவற்றிற்கு முக்கியமான ஒன்று பாஸ்வோர்ட். இன்று உலகளவில் பாஸ்வேர்ட் ஹேக்கிங் என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. தற்பொழுது பெருகி வரும் சைபர் குற்றங்களை தடுப்பதற்கு வல்லுனர்கள் குறைவாக தான் உள்ளனர்.
சைபர் குற்றங்களை தடுக்கும் வல்லுனர்களை உருவாக்கும் படிப்பு தான் இன்டெர்நெட் செக்யூரிட்டி என்று அறியப்படும் ‘எத்திக்கல் ஹேக்கிங்’. இளைஞர்கள் மத்தியில் எத்திக்கல் ஹேக்கிங் தொடர்பான படிப்புகளுக்கு தொடர்ந்து ஆர்வம் அதிகரித்து வருகிறது.
உங்களுக்கும் இந்த ஹேக்கிங் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளதா? கீழே உங்களுக்கான தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹேக்கிங் துறையில் உங்களுக்கான பணி என்ன?
எத்திக்கல் ஹேக்கர்களின் பணி என்பது, இணையத்தில் ஒரு தவறு நடப்தற்கு முன்பு அதனை கண்டறிந்து அதற்கான சாத்தியகூறுகளை ஆராய்ந்து இணையவழி மற்றும் கணினி வழி நமது ரகசியங்கள் திருடு போகாத வண்ணம், சரியான முறையில் பாதுகாப்பதாகும்.
வேலை வாய்ப்பு:
பல்வேறு இணைய கணக்குகளை இருந்த இடத்தில் இருந்தே ஹேக் செய்து தகவல்களை திருடுவது தான் ஹேக்கர்ஸ் பணி. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும் என்பது போல் ஹேக்கர் கையாளும் உத்திகளை கையாண்டு ஹேக்கர்ஸ் திருடாத வண்ணம் பாதுகாப்பு மேம்பாட்டை உருவாக்குபவர்கள் தான் சிறந்த எத்திக்கல் ஹேக்கர்ஸ்.
உங்களுக்கான வேலை வாய்ப்பு:-
பிரபல முன்னணி நிறுவனங்கள் வங்கிகள் உட்பட பலவும் தங்களது இணையப் பாதுகாப்பின் தரத்தினை அறிந்துகொள்ள எத்திக்கல் ஹேக்கர்ஸை ‘தகவல் பாதுகாப்புத் துறை வல்லுநர்கள்’ என்ற பெயரில் பணிக்கு அமர்த்தி வருகின்றன.
இன்னும் எளிதாக சொல்ல வேண்டுமானால் இணைய பயன்பாடு எங்கெல்லாம் அதிகமாக உள்ளதோ அங்கெல்லாம் உங்களுக்கு பணி உள்ளது.
சிறந்த எத்திக்கல் ஹேக்கர்ஸ் ஆவது எப்படி?
– கம்யூட்டர் சயின்ஸ் அல்லது  ஐடி ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்த பின் இதற்கென உள்ள சிசிஎன்ஏ, சிஇஎச், எஸ்சிஎன்எஸ், சிபிடிஇ, சிஐஎஸ்எஸ்பி போன்ற சான்றிதழ் படிப்புகளை படிக்கலாம்.
– அல்லது நேரடியாக இதற்கான குறுகிய கால படிப்புகளையும் படிக்க முடியும். இப்படிப்பு படிப்பதற்கு உங்களிடம் உள்ள ஆர்வம் தான் மிக முக்கியம். ஆர்வம் இல்லையெனில் இப்படிப்பினை படிக்க முடியாது.
எத்திக்கல் ஹேக்கர் படிப்பிற்கான அடிப்படை தகுதிகள்:-
– இயங்குதளம் அதாவது ஓஎஸ் என்றழைக்கப்படும் விண்டோஸ், லினக்ஸ், உபுண்டு, பயர் பாக்ஸ் போன்ற இயங்குதளங்களை நன்றாக கையாளத் தெரிந்திருக்க வேண்டும்.
பயிற்றுவிக்கப்படும் இடங்கள்:
– கணினி மொழிகள் என்றழைக்கப்படும் ஜாவா, சி,சி++, பைத்தான் போன்றவைகளில் குறைந்த பட்ச புரிதல் அவசியம்.
– கம்யூட்டர் சயின்ஸ் துறையில் பட்டப்படிப்பு முடித்திருந்தால் இதைக் கற்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் எளிதாக இருக்கும்.
எத்திக்கல் ஹேக்கர் படிப்புகள்:-
– இன்பர்மேஷன் செக்யூரிட்டி மற்றும் சிஸ்டம் மேலாண்மையில் முதுநிலை டிப்ளமோ படிப்பு.
– சைபர் பாரன்சிக்ஸ் மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.எஸ்சி.
– சைபர் செக்யூரிட்டி மற்றும் இன்பர்மேஷன் செக்யூரிட்டியில் எம்.டெக் போன்ற துறைகளில் இப்படிப்பை படிக்கலாம்.
– என்ஜினிரிங், எம்எஸ்சி கணிதம், எம்சிஏ முடித்தவர்கள், எம்இ., ஐடி படிப்பில் எத்திக்கல் ஹேக்கிங் பிரிவில் சேர்ந்து படிக்கலாம்.
-இன்பர்மேஷன் செக்யூரிட்டி பிரிவில் எம்.டெக்., அல்லது எம்.எஸ்சி., படிப்பில் சேர, பெரும்பாலும் கேட் எனப்படும் நுழைவுத்தேர்வே தகுதியான ஒன்றாக எடுத்துக்கொள்ளப்படுகிறது.
தற்பொழுது  பல்வேறு இடங்களில் உள்ள பொறியியல் கல்லூரியில் இந்த வகையான படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
பயிற்றுவிக்கும் இடங்கள் அதாவது கல்லூரிகள்:-
 பல்கலைக்கழகம் உள்ளிட்டவை எத்திக்கல் ஹேக்கிங்கிற்காக தனியாகப் பல்வேறு வகையான படிப்புகளை வழங்குகின்றன.
– பல்வேறு தனியார் துறைகள் ஆன்லையனில் இந்த படிப்பிற்கான வகுப்புகளை எடுக்கின்றனர்.
ஹேக்கர்ஸ் இந்த துறையில் விரும்பி படித்தல் மட்டுமே நீங்கள் சாதிக்க முடியும். கற்றலில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். உங்களுக்கு இந்த துறையில் ஆர்வம் அதிகம் உள்ளதா உடனே இந்த துறையை தேர்ந்தெடுங்கள்.

Post a Comment

5 Comments