வாட்ஸ்அப் செயலி இன்று மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வளர்சிகளை சந்தித்து வருகிறது.
அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் செயலி பேஷ்புக்கின் கட்டுபாட்டின் கீழ் வந்த பிறகு பல்வேறு சிறப்பம்சங்களை புகுத்தி வருகிறது.
அந்தவகையில் சமீபத்தில் அனுப்பிய மெசேஜை டெலிட் செய்யும் வசதி, க்ரூப் டிஸ்க்ரிப்சன் வசதி, வாய்ஸ் காலில் இருந்து கட் செய்யாமலே வீடியோ காலிற்கு செல்லும் வசதி போன்றவை வழங்கப்பட்டது.
மேலும் வாட்ஸ்அப் செயலி தற்போது நிலவி வரும் பெரும் ஒரு பெரிய பிரச்னை வதந்திகள் என்று அழைக்கப்படும் போலி செய்திகள். இதன் மூலம் பல்வேறு பிரச்சனைகள் நிகழ்ந்து வருகிறது.
இவ்வாறான போலி செய்திகள் பரவுவதை தவிர்க்க வாட்ஸ்அப் நிறுவனம் ஒரு முயற்சியை எடுத்துள்ளது. அது குறித்து கீழே விரிவாக காணலாம்.
அந்தவகையில் போலி செய்திகளை கண்டறியும் புதிய சிறப்பம்சம் வாட்ஸ்ஆப் செயலியில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
பொதுவாக வாட்ஸ்ஆப் க்ரூப்புகளில் தான் இது போன்ற போலி செய்திகள் அதிக அளவில் பரப்பப்படுகிறது. எனவே இதனை கண்டறியும் முயற்சியில் தான் வாட்ஸ்அப் தற்போது இறங்கியுள்ளது.
இந்த புதிய வசதி மூலம் வாட்ஸ்அப்பில் பரப்பப்படும் அனைத்து லிங்குகளும் வாட்ஸ்அப் மூலம் சோதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அம்சம் சஸ்பீஷியஸ் லின்க் (Suspicious Link) என அழைக்கப்படுகிறது. ஒருவேளை குறிப்பிட்ட லிங்க் போலியானது என்றால் பயனர்களுக்கு எச்சரிக்கை வழங்கப்படும்.
உங்களுக்கு வரும் போலி செய்தி அல்லது லிங்க் போலியானது எனில் அதனை வாட்ஸ்அப் தானாக கண்டறிந்து உங்களுக்கு எச்சரிக்கை வழங்கும் மேலும் குறிப்பிட்ட செய்தி சிவப்பு நிறத்தில் உங்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வாட்ஸ்அப் பீட்டா 2.18.204 வெர்சனில் இந்த சிறப்பம்சம் சோதனை செய்யப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த சிறப்பம்சம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறான போலி செய்திகள் பரவுவது மற்றும் பரப்புவபர்களை கண்டறியும் முயற்சியில் வாட்ஸ் அப் ஏற்கனவே பல்வேறு முயற்சிகள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments