இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் சமூக வலைத்தளங்களில் தான் தங்கள் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். சமூகவலைத்தளம் மிகச்சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக மாறிவிட்டது எனலாம்.
சமூகவலைத்தளம் என்றாலே நம் ஞாபகத்திற்கு முதலில் வருவது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம். இவை இரண்டையும் உலகளவில் பல கோடி மக்கள் பயன்படுத்து கின்றனர்.
![à®à®©à¯à®¸à¯à®à®¾à®à®¿à®°à®¾à®®à¯ à®
à®à¯à®à®µà¯à®£à¯à®à¯-à® à®
ழிபà¯à®ªà®¤à¯ à®à®ªà¯à®ªà®à®¿?](https://tamil.gizbot.com/img/2018/07/howtodownload-instagramvideos-photosonyour-smartphone-last-r-yk-g-1532086752.jpg)
இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் ஆகிய இரண்டு சமூக வலைதளங்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த இரண்டு தளங்களும் பயனரின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்ய பயன்படுகிறது.
இந்த இரண்டு தளங்களிலும் பயனர்கள் தங்களது நினைவுகளான புகைப்படங்களை பதிவேற்றம் செய்து மகிழ்கின்றனர். ஒரு சிலர் மட்டுமே இதில் கவனத்துடன் செயல்படுகின்றனர், ஏன் இப்படி சொல்லுகின்றோம் என்றால் இதில் பலர் அடிமையாகிவிட்டனர்.
ஆம் விர்ச்சுவல் வாழ்க்கை நம் நேரத்தை அதிகளவு அபகரித்து கொள்ளும். தொடர்ச்சியாக இதில் இருக்கும் பட்சத்தில் நமக்கு விர்ச்சுவல் அடிக்ஷன் எனப்படும் ஒருவித அடிமை உணர்வு ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.
அந்தவகையில் சில காலம் சமூக வலைதளங்களில் இருந்து ஒதுங்கி இருக்கலாம் என்று விரும்புகிறீர்களா, சரி இன்ஸ்டாகிராம் கணக்கில் இருந்து எப்படி விடுபடலாம்.
அதாவது இன்ஸ்டாகிராம் கணக்கை எவ்வாறு நிரந்தரமாக டெலிட் செய்யலாம் அல்லது தற்காலிகமாக செயல்படாமல் செய்யலாம் என கீழே பார்க்கலாம்.
இதனை செய்யவதற்கு முன் பயனர்கள் சிறிது காலத்திற்கு முன் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். தற்காலிகமாக டிசெபில் செய்வதன் மூலம் சில தினங்களுக்கு பின் கணக்கை தொடர்ந்து பயன்படுத்தலாம்.
ஆனால் நிரந்தரமாக டெலிட் செய்து விட்டால் உங்கள் கணக்கின் மொத்த டேட்டாவும் அளிக்கப்பட்டு விடும் எனவே அதனை பேக்கப் செய்வது சிறந்தது.
இன்ஸ்டாகிராம் கணக்கை தற்காலிகமாக டிசேபிள் செய்வது எப்படி?
– முதலில் கணினியிலோ அல்லது உங்களது மொபைலிலோ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை லாக் இன் செய்யவும்.
– முதலில் கணினியிலோ அல்லது உங்களது மொபைலிலோ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை லாக் இன் செய்யவும்.
– லாக் இன் செய்த பின் வலதுபுறத்தில் உள்ள ப்ரோஃபைல் (Profile) பட்டனை க்ளிக் செய்யவும்.
– ப்ரோஃபைல் பக்கத்தில் எடிட் ப்ரோஃபைல் “Edit Profile” ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
– இன்ஸ்டாகிராம் டெலிட் செய்ய கோரும் பக்கத்தில் ‘Temporarily disable my account’ என்பதை கிளிக் செய்வும்.
– இறுதியாக உங்களது இன்ஸ்டாகிராம் பாஸ்வர்டை பதிவிடவும் அவ்வளவு தான் உங்களது கணக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும்.
![à®à®©à¯à®¸à¯à®à®¾à®à®¿à®°à®¾à®®à¯ à®
à®à¯à®à®µà¯à®£à¯à®à¯-à® à®
ழிபà¯à®ªà®¤à¯ à®à®ªà¯à®ªà®à®¿?](https://tamil.gizbot.com/img/2018/07/how-to-filter-and-star-instagram-messages-g-1532086742.jpg)
இன்ஸ்டாகிராம் கணக்கை நிரந்தரமாக டெலிட் செய்வது எப்படி?
– முதலில் கணினியிலோ அல்லது உங்களது மொபைலிலோ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை லாக் இன் செய்யவும்.
– முதலில் கணினியிலோ அல்லது உங்களது மொபைலிலோ இன்ஸ்டாகிராம் அக்கவுண்டை லாக் இன் செய்யவும்.
– லாக் இன் செய்த பின் வலதுபுறத்தில் உள்ள ப்ரோஃபைல் (Profile) பட்டனை க்ளிக் செய்யவும்.
– ப்ரோஃபைல் பக்கத்தில் எடிட் ப்ரோஃபைல் “Edit Profile” ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.
– இன்ஸ்டாகிராம் டெலிட் செய்ய கோரும் பக்கத்தில் ‘Permanently delete my account’ என்பதை கிளிக் செய்வும்.
– அதன் பின்னர் உங்கள் கணக்கை ஏன் நீக்க வேண்டும் என்பதற்கான காரணத்தை பதிவிடவும்.
– இறுதியாக உங்களது இன்ஸ்டாகிராம் பாஸ்வர்டை பதிவிடவும் அவ்வளவு தான் உங்களது கணக்கு நிரந்தரமாக டெலிட் செய்யப்படும்.
0 Comments