அனைத்து மக்களின் கைகளிலும் தற்பொழுது ஆண்ட்ராய்டு போன் வந்துவிட்டது, ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பொறுத்த வரை, தனது ஓஎஸ்-சை விருப்பத்திற்கேற்ப மாற்றியமைக்கும் விஷயத்தில் ஏராளமான சுதந்திரத்தை அளித்துள்ளது. இதனால் செல்போன் தயாரிப்பாளர்கள் புது புது மாற்றங்களை ஆண்ட்ராய்டின் மேல் செலுத்தி தங்களை தனித்துவமாக காட்ட விரும்புகின்றனர். மேலும் சில நிறுவனங்கள் ஸ்டேட்டஸ் பாரில் இணையதள பயன்பாட்டு அளவீடு (இன்டர்நெட் ரீடர்) வைக்கிறார்கள், சிலர் அப்படி செய்வதில்லை. இந்த இணையதள பயன்பாட்டு அளவீடு ஸ்டேட்டஸ் பாரில் இருந்தால், எந்தொரு செயலியை பயன்படுத்தும் போதும் அதற்கான டேட்டா பயன்பாட்டை பயனாளர் அறிந்து கொள்ள முடியும். இதன் மூலம் அதிக டேட்டாவை பயன்படுத்தும் செயலி எது குறைவாக டேட்டா பயன்படுத்தும் செயலி எது என எளிதில் கண்டு பிடிக்க முடியும், சரி உங்கள் போனின் ஸ்டேட்டஸ் பாரில் இந்த இன்டர்நெட் ரீடரை எப்படி வர வைப்பது என்று பார்க்கலாம்.
- கூகுள் ப்ளே ஸ்டோருக்கு சென்று (NPERF) என்ற செயலியை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
- இந்த செயலியை இன்ஸ்டால் செய்தவுடன் அது அதனுடைய பணியை துவங்கி விடும், உங்கள் ஸ்டேடஸ் பாரில் இணையதள பயன்பாட்டு அளவை கட்ட துவங்கி விடும்.
- இந்த செயலி மூலம் டேட்டா பயன்பாட்டு அளவுகள், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யும் வேகம் போன்ற அளவுகளை துல்லியமாக உங்கள் ஸ்டேடஸ் பாரில் தெரியப்படுத்தும்.
- இந்த செயலியை விருப்பத்திற்கு ஏற்ப மாற்றி அமைக்கலாம். உங்கள் ஃபோனில் எங்கு வேண்டுமானாலும் இதனை வைத்து கொள்ளலாம்.
- இந்த செயலியை பயன்படுத்தி உங்கள் போனில் எந்த செயலி அதிக டேட்டாவை பயன்படுத்துகிறது, எது குறைவான டேட்டாவை பயன்படுத்துகிறது என்பதை கண்டறிந்து அதிக டேட்டா பயன்படுத்தும் செயலியை நீக்கி உங்கள் போனின் வேகத்தை அதிக படுத்தலாம்.
கூகுள் பிளே ஸ்டோரில் பல்வேறு செயலிகள் இருந்தாலும், இந்த செயலி பாதுகாப்பான பயன்பாட்டிற்கு உகந்தது.
0 Comments