வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ்-ஐ பார்க்கிறது நண்பர்களுக்கு தெரியக்கூடாதா…அப்போ இதை படிங்க!

இன்றையை தலைமுறையினரை ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற சமூக வலைத்தளங்களே கட்டுக்குள் வைத்திருக்கின்றன. குறிப்பாக குழைந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ்அப் செயலிக்கு அடிமையாகவே இருந்து வருகின்றனர். இதன் காரணமாகவே வாட்ஸ்அப் இன்று ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்தம் அனைவரது ஃபோனில் கண்டிப்பாக இடம் பெற்றுள்ளன. பல்வேறு ஃபோன் கம்பணிகளும் வாட்ஸ்அப் செயலியை இன்-பில்ட் ஆக தங்களது வாடிக்கையாளர்களுக்கு இணைத்து கொடுக்கின்றனர். இன்று வாட்ஸ்அப் பயன்பாட்டில் உள்ள ஒரு தெரியாத அம்சத்தை குறித்து பார்க்கலாம்.
கடந்த ஆண்டு அறிமுகாமான புதிய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் புகைப்படம், வீடியோ அல்லது எமோஜிக்களை நாம் வைத்து கொள்ள முடியும். இந்த ஸ்டேட்டஸ் ஆனது செட் செய்த 24 மணி நேரத்தில் தானாக மறைந்து விடும். இந்த ஸ்டேட்டஸ்-ஐ யார் யார் பார்த்தார்கள் என்ற அம்சமும் இதில் இடம்பெற்றுள்ளது. இந்தப் பயன்பாடுஅனைத்து மக்களையும் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று  உங்களக்கு நண்பர்கள், உறவினர்கள் வைத்துள்ள ஸ்டேட்டஸ் நீங்கள் பார்த்தாலும் அது அவர்களுக்கு தெரியாமல் எப்படி இருப்பது என்ற அம்சத்தை சொல்ல போகிறோம்.
வழிமுறை1: முதலில் உங்கள் வாட்ஸ்அப் செயலியை ஓபன் செய்து வலது பக்கத்தின் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து Settings-க்கு செல்லவும்.
வழிமுறை2: Settings-ல் சென்று Account என்ற ஆப்ஷனுக்கு செல்லவும்.
வழிமுறை3: இதனையடுத்து Privacy-ல் உள்ள Read Receipts என்ற ஆப்ஷனை ஆஃப் செய்து விடுங்கள். (இது Default-ஆக ஆன் செய்து இருக்கும்).
இனி நீங்கள் யாருடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ பார்த்தாலும் அவர்களுக்கு தெரியாது.
குறிப்பு: இந்த அம்சமானது வாட்ஸப்பில் உள்ள Last seen போன்றது. அவர்களுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ எப்படி நீங்கள் பார்ப்பது அவர்களுக்கு தெரியாதோ அதேப்போல் உங்களுடயை ஸ்டேட்டஸ்-ஐ யார் யார் பார்த்தது என்பதும் உங்களுக்கு தெரியாது.

Post a Comment

0 Comments