ஸ்மார்ட்போன் மூலம் நமது ரகசியம் எவ்வாறு கசிகிறது என்பதை பார்க்கலாம்!!!

இன்றைய கால கட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே தங்களது ஸ்மார்ட்போனில் நேரத்தை செலவிடுகின்றனர். அதே போல் இணைய பயன்பாடும் அதிகமாகியுள்ளது, இணையத்தை பயன்படுத்தாதவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம் அந்த அளவிற்கு ஆகிவிட்டது.
தொழில்நுட்பம் அதிவேக வளர்ச்சி அடைந்து வருகிறது. தொழில் நுட்ப வளர்ச்சியில் எந்த அளவிற்கு நன்மை உள்ளதோ அதை விட அதிகமாக தீமையும் உள்ளது.
இந்தியாவில் உள்ள பல மில்லியன் மக்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் தான் அதிகம் பயன்படுத்துகின்றனர், மேலும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை பயன்படுத்தும் போது கவனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொள்ளவும். ஸ்மார்ட்போன் மூலம் உங்கள் தகவல் எளிதில் திருடப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
உங்கள் ஸ்மார்ட்போனில் எந்த எந்த வழியில் உங்கள் தகவல் திருடப்படுகிறது, எவ்வாறு திருடப்படுகிறது என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.
இ-மெயில்:
நாம் அனைவருமே நமது ஸ்மார்ட்போனில் இ-மெயில் பயன்படுத்துவோம், இதன் ஐடி, பாஸ்வர்ட் மற்றவர்களுக்கு தெரியாமல் பார்த்துகொள்வது மிகவும் முக்கியமான ஒன்று. உங்களது இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட் கொண்டு உங்கள் போனில் உள்ள தகவல்களை எளிதில் பெற முடியும்.
உதாரணமாக தற்பொழுது உள்ள தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உங்கள் இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட் கொண்டு உங்கள் போனில் உள்ள புகைப்படம், மொபைல் எண்கள், உங்களது தனிப்பட்ட விவரங்கள் போன்றவற்றை எளிதில் பெற முடியும். மேலும் உங்களது அனுமதியின்றி உங்களது ஸ்மார்ட்போன் கேமராவை மற்றவர் பயன்படுத்த முடியும்.
உங்களது இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட் கொண்டு உங்களது போனை உங்களுக்கு தெரியாமல் லாக் செய்ய முடியும், உங்களது தகவல்களை அளிக்க முடியும் , நீங்கள் இருக்கும் இடத்தை எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
எனவே உங்கள் ஸ்மார்ட்போனில் பயன்படுத்தும் இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட் மற்றவருக்கு தெரியாமல் பார்த்து கொள்ளவேண்டியது மிகவும் முக்கியம். இதற்கான சிறந்த தேர்வு உங்கள் இ-மெயில் பாஸ்வர்டை அடிக்கடி மாற்றி உங்கள் இ-மெயிலை பயன்படுத்தவும்.
தேவை இல்லாத அப்ளிகேசன்:-
உங்களுக்கு தேவை இல்லாத அப்ளிகேசனை உங்கள் போனில் பயன்படுத்துவதை தவிர்ங்கள். பிளே ஸ்டோரில் பல வகையான அப்ளிகேசன்கள் உள்ளன அவை அனைத்துமே பாதுகாப்பானது இல்லை, எனவே ஒவ்வொரு அப்ளிகேஷனை பயன்படுத்தும் போதும் கவனம் தேவை.
விளம்பரங்கள்:
உங்கள் போன் பிரவுசரில் இணையதளம் பயன்படுத்தும் போது அதில் பல விளம்பரங்கள் வரும் அவற்றில் சில உங்கள் போனை உளவு பார்க்க ஹேக்கர்ஸ் தயார் செய்து அனுப்புவது. இந்த விளம்பரங்களை தவறுதலாக கிளிக் செய்யும் போது நமது போனில் உள்ள தகவல்கள் எளிதில் ஹேக்கர்சால் பெற முடியும்.
குறிப்பாக நாம் அனைவருமே வாட்ஸ்அப் பயன்படுத்துகிறோம் அதில் அவ்வபோது சில மெசேஜ் வருவதை பார்த்திருப்போம் இந்த தகவலை பத்து பேருக்கு பகிரவும், இந்த லிங்கை கிளிக் செய்தால் 10GB இலவச டேட்டா கிடைக்கும், 50,000 ரூபாய் மதிப்புள்ள போன் 10,000 ரூபாய், மேலும் குறிப்பிட்ட சில லிங்கை உங்களது நண்பர்களுடன் பகிரவும். இதுபோன்ற விளம்பரங்களை நீங்கள் ஒரு போருட்டவே மதிக்க கூடாது.
மேலும் இந்த விளம்பரங்களில் உள்ள லிங்குகளை கிளிக் செய்து அதில் உங்கள் இ-மெயில் ஐடி, பாஸ்வர்ட் கொடுக்கும் போது நாமே ஹெக்கர்சுக்கு நமது தகவலை கொடுபதற்கு சமம், மேலும் உங்கள் போனின் ஐபி முகவரி-யையும் எளிதில் ஹேக்கர்ஸ் பெற முடியும் இதனை கொண்டு உங்கள் போனை உங்கள் அனுமதி இல்லாமலே மற்றவர் பயன்படுத்த முடியும்.
இது போன்ற விளம்பரங்களில் உள்ள லிங்கை கிளிக் செய்வதால் உங்கள் போனில் உள்ள தகவல்கள் எளிதில் ஹெக்கர்சால் திருடப்படும். எனவே உங்கள் போனிற்கு வரும் விளம்பரங்களை முற்றிலும் தவிருங்கள்.
ஸ்மார்ட்போனை அதிகமாக பயன்படுத்தும் பெண்களே உஷார்! மேலே கூறிய தகவல் அனைத்துமே உங்களுக்கு தான்.. கவனமாக இருங்கள், இணையத்தை பயன்படுத்தும் போது கவனம் மிக அவசியம்.


Post a Comment

0 Comments