வாட்ஸ்அப் நிறுவனம் தனது ஐஃபோன் வாடிக்கையாளர்களுக்குயூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப்-லேயே பார்க்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
முன்பெல்லாம் நமது நண்பர்களோ அல்லது உறவினர்களோ நமக்கு வாட்ஸ்அப்-பில் யூடியூப் வீடியோவின் இணைப்பினை நமக்கு அனுப்பினால் அதனை பார்க்க முயற்சிக்கையில் அது தானாக யூடியூப் செயிலியில் திறக்கப்படும், அல்லது அந்தயூடியூப் வீடியோவின் லிங்கினை எடுத்து யூடியூப் செயலியில் கொண்டு நாம் பார்ப்பது உண்டு. ஆனால் இனி நேரடியாகயூடியூப் வீடியோக்களை வாட்ஸ்அப்-லேயே பார்க்கும் வசதியை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ளப்படும்யூடியூப் வீடியோக்களின் லிங்கினை கிளிக் செய்து வாட்ஸ்ஆப்-லேயே வீடியோக்களை பார்த்து ரசிக்கலாம். இந்த அம்சத்தில் வீடியோ திரை முழுக்க பாப்-அப் ஆவதோடு பிளே, பாஸ், குளோஸ் மற்றும் ஃபுல் ஸ்கிரீன் உள்ளிட்ட அம்சங்களுக்கு ஏற்ற பட்டன்களும் கொண்டுள்ளது. இதனுடன் வீடியோ அளவின மாற்றியமைக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி யூடியூப் வீடியோவை திரையின் மேல் அல்லது கீழ்பகுதிகளில் நமக்கு ஏற்ற இடத்தில் அமைத்து காணலாம்.
முதலில் ஐஃபோன் வாடிக்கையாளர்களுக்கு மட்டும் டெஸ்டிங் முறையில் இதனை வாட்ஸ்அப் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக ஐஃபோன் வாடிக்கையாளர்கள் தங்களது வாட்ஸ்அப் செயலியை பீட்டா வெர்சனில் (2.18.11) ஆப்பில் ஆப் ஸ்டோரில் இருந்து அப்டேட் செய்ய வேண்டும். அதற்கு பிறகு இந்த வசதியை அவர்கள் பயன்படுத்தலாம் என்று வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
விரைவில் இந்த வசதி ஆண்ராய்ட் மற்றும் விண்டோஸ் வாடிக்கையாளர்களுக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments