இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் உள்ள வீடியோவை பதிவிறக்கம் செய்யும் முறை


இன்றைய தலைமுறையினர் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் தங்கள் நேரத்தை பெரிதும் செலவிடுகின்றனர். அதற்கேற்றார் போல் இந்த சமூக வலைத்தளங்களும் புது புது மாற்றங்களை கொடுத்து கொண்டே உள்ளன. உலகின் கடை கோடியில் உள்ள மனிதர் வரை இந்த இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் சென்றடைந்துவிட்டது. இதில் தினமும் கோடிக்கணக்கான தகவல்கள் பரிமாறப்படுகின்றன. புகைப்படம், வீடியோ, செய்திகள் போன்றவை இதில் பெரிதும் பரிமாறப்படுகின்றன. இதில் பரிமாறப்படும் வீடியோக்கள் சில சமயம் நமக்கு பிடித்ததாக இருக்கும் அதனை பதிவிறக்கம் என்ற எண்ணம் நமக்கு தோன்றும், ஆனால் இந்த செயலியில் அதை பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் இருக்காது அந்த சமயம் நாம் ஏமாற்றத்தை அடைவோம்.

இனிமேல் இதை பற்றி கவலை பட தேவை இல்லை உங்களுக்கு பிடித்த வீடியோக்களை நீங்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்-கிலிருந்து எளிதாக பதிவிறக்கம் செய்ய முடியும். கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பின்பற்றி உங்களுக்கு பிடித்த வீடியோக்களை இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்-கிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.
ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் இயங்குதளங்களில் மிக எளிமையாக உங்களுக்கு பிடித்த விடியோவை பதிவிறக்கம் செய்ய முடியும். பின்வரும் செயலிகளை உங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதன் மூலம் உங்களுக்கு பிடித்த வீடியோவை எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

பேஸ்புக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் முறை:-

ஐஒஎஸ் ஆப் ஸ்டோரில் பேஸ்புக் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வதற்கு பல செயலிகள் பயன்பாட்டில் உள்ளன இருந்தும் அவை பயன்படுத்துவதற்கு கடினமாக இருக்கலாம்.
ஐஒஎஸ் இயங்குதளத்தில் மைமீடியா என்ற செயலியை நிறுவுவதன் மூலம் பேஸ்புக்-கில் உங்களுக்கு பிடித்த வீடியோவை எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
நீங்கள் எந்த வீடியோவை பேஸ்புக்-கிலிருந்து பதிவிறக்கம் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வீடியோவின் URL-ஐ காப்பி செய்து மைமீடியா செயலியில் உள்ளீடு செய்து அந்த வீடியோவை எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இந்த செயலி ஐஒஎஸ் இயங்குதளம் மட்டுமல்லாமல் ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும் இயங்கும், மேலே கூறிய அதே செயல்முறையை பயன்படுத்தி ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் வீடியோவை பதிவிறக்கம் செய்யலாம்.

இன்ஸ்டாகிராமில் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் முறை:-

ஐஒஎஸ் இயங்குதளத்தில் IG என்ற செயலியை நிறுவுவதன் மூலம் இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு பிடித்த வீடியோவை எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
நீங்கள் எந்த வீடியோவை இன்ஸ்டாகிராமிலிருந்து பதிவிறக்கம் செய்ய விரும்புகிறீர்களோ அந்த வீடியோவின் URL-ஐ காப்பி செய்து IG செயலியில் உள்ளீடு செய்து அந்த வீடியோவை எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இன்ஸ்டா சேவ் (Insta Save) என்ற செயலியை நிறுவுவதன் மூலம் இன்ஸ்டாகிராமிலிருந்து வீடியோவை எளிதில் பதிவிறக்கம் செய்ய முடியும்.

Post a Comment

0 Comments