பேஸ்புக் உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் மிக முக்கியமான சமூக வலைத்தளம் ஆகும். இந்த பேஸ்புக் சமூகவலைத்தளம் மார்க் ஜுக்கர்பெர்க் மற்றும் அவரது நண்பர்களால் கடந்த 2004-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது.
பேஸ்புக் சமீப காலமாக தனது பயனாளர்களை கவர்வதற்கு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதற்கு ஏற்றாற்போல் அவ்வபோது புதிய அப்டேட்டுகளை வழங்கிய வண்ணம் உள்ளது.
![பà¯à®¸à¯à®ªà¯à®à¯à®à®¿à®²à¯ à®°à¯à®à®¾à®°à¯à®à¯ à®à¯à®¯à¯à®¯à¯à®®à¯ வà®à®¤à®¿ à®
றிமà¯à®à®®à¯.!](https://tamil.gizbot.com/img/2018/04/fb-ok-1524120507.jpg)
அந்தவகையில் தற்போது புதிய சிறப்பம்சம் ஒன்றை பேஸ்புக் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது பேஸ்புக் செயலி பயன்படுத்தி வரும் பயனாளர்கள் பேஸ்புக் செயலியில் இருந்தே தங்கள் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
தற்போது வரை மக்கள் மொபைல் எண்ணை ரீசார்ஜ் செய்ய பல்வேறு செயலிகள் அல்லது அருகில் உள்ள கடைக்கு சென்று ரீசார்ஜ் செய்து வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்ட பேஸ்புக் நிறுவனம் ரீசார்ஜ் செய்வதற்கு எதற்கு வேறு செயலிகளுக்கு சென்று நேரத்தை வீணடிக்க வேண்டும் என்று தங்கள் செயளியிலே இந்த சிறப்பம்சத்தை வழங்கியுள்ளது.
முதற்கட்டமாக ரீசார்ஜ் செய்யும் வசதி ஆன்ட்ராய்டு ஃபேஸ்புக் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபோன் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த சிலகாலம் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
![](https://img.maalaimalar.com/InlineImage/201804191134212311_1_FB-recharge-scrn._L_styvpf.jpg)
பேஸ்புக் மூலம் எவ்வாறு ரீசார்ஜ் செய்வது?
– பேஸ்புக் செயலியில் மேல் பக்கவாட்டில் உள்ள செட்டிங்க்ஸ் அமைப்பை கிளிக் செய்யவும். அதில் மொபைல் டாப் அப் ஆப்ஷன் காணப்படும்.
– பேஸ்புக் செயலியில் மேல் பக்கவாட்டில் உள்ள செட்டிங்க்ஸ் அமைப்பை கிளிக் செய்யவும். அதில் மொபைல் டாப் அப் ஆப்ஷன் காணப்படும்.
– அதனை கிளிக் செய்து அங்கு மொபைல் நம்பர் மற்றும் ரீசார்ஜ் தொகையை பதிவிடவும்.
– இங்கு குறிப்பிட்ட நெட்வொர்க் வழங்கும் சிறப்பு சலுகைகளை பார்த்து அவற்றை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
– பின்னர் பணம் செலுத்தும் அமைப்பை கிளிக் செய்யவும். உங்கள் ரீசார்ஜ் தொகையை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு கொண்டு செலுத்தலாம்.
பேஸ்புக் மொபைல் ரீசார்ஜ் அம்சத்தில் தற்போது வரை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. யுபிஐ அல்லது மற்ற மொபைல் வாலெட் கொண்டு பணம் செலுத்தும் வசதி இன்னும் வழங்கப்படவில்லை, பின்வரும் நாட்களில் இதுவும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் ஃபேஸ்புக் சார்பில் புதிய ஊக்கத்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த திட்டம் என்னவென்றால் டேட்டா அப்யூஸ் பவுன்டி என்று கூறப்படுகிறது. இந்த திட்டத்தின் படி ஆப் டெவலப்பர்கள் யாரேனும் பயனர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்துவது பற்றி உங்களுக்கு தெரிந்தால் அது குறித்து பேஸ்புக்-கிடம் நீங்கள் புகார் அளிக்கலாம்.
இதுகுறித்து நீங்கள் அளிக்கும் புகார் பேஸ்புக் மூலம் சரி பார்க்கப்படும், நீங்கள் அளித்த புகார் உண்மை என்றால் பேஸ்புக் சார்பில் உங்களுக்கு ஊக்கதொகை அளிக்கப்படும்.
இந்த டேட்டா அப்யூஸ் பவுன்டி ஊக்கத்தொகை திட்டத்தில் 40,000 டாலர்கள் வரை வழங்கப்படும் என ஃபேஸ்புக் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும். குறிப்பாக தகவல் திருட்டு உறுதிசெய்யப்பட்டால், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் பிரட்டனைச் சேர்ந்த ஆலோசனை நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தேர்தல் வியூகங்களை வகுப்பதற்காக பேஸ்புக் பயனாளரின் தகவல்களை சட்டவிரோதமாக பெற்றதாக குற்றசாட்டு எழுந்தது. இதனைத்தொடர்ந்து சேனல் 4 தொலைகாட்சி நிறுவனம் நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் மூலம் பேஸ்புக்கில் மக்களின் தகவல்களை திருடியது கண்டுபிடிக்கப்பட்டது.
![à®à¯à®©à®²à¯ 4 தà¯à®²à¯à®à®¾à®à¯à®à®¿ :](https://tamil.gizbot.com/img/2018/04/howto-stopappsfrom-usingyour-facebook-data--1524120684.jpg)
சுமார் 50 மில்லியன் பேஸ்புக் பயனர்களின் தனிப்பட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அது கடந்த 2016-ஆம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி அடைவதற்கான வழிமுறைகளை தொகுக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தகவல் திருடப்பட்டது உண்மை தான் என்றும் அதற்காக அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார். இதற்காகவே தற்போது டேட்டா அப்யூஸ் பவுன்டி என்ற திட்டம் பேஸ்புக்கில் வழங்கப்பட்டுள்ளது.
0 Comments