வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்சினை எளிதில் பதிவிறக்கம் செய்யும் முறை !!!

வாட்ஸ்அப் செயலி கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு வளர்சிகளை சந்தித்து வருகிறது. சாதாரண மெசெஜ் அனுப்பும் செயலியாக இருந்த இந்த வாட்ஸ்அப் தற்பொழுது பல சிறப்பம்சங்களை உள்ளடக்கிய செயலியாக உருவெடுத்துள்ளது. அதிலும் வாட்ஸ்அப், பேஸ்புக்கின் கட்டுப்பாட்டிற்குள் வந்த பிறகு இதன் வளர்ச்சி தாறுமாறாக சென்று கொண்டுள்ளது. தற்பொழுது வாட்ஸ்அப்-பில் கால், வீடியோ கால், மெசேஜ் வசதி, ஸ்டேடஸ், போன்றவை வந்துவிட்டன, இவற்றில் ஸ்டேடஸ் வைக்கும் வசதி வந்தவுடன் இதன் பயன்பாடு அதிகமாகிவிட்டது. நம்மில் பலருக்கும் மற்றொருவர் வைக்கும் ஸ்டேட்டசினை பதிவிறக்கம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் இருக்கும் ஆனால் அதனை எப்படி செய்வதென்று தெரியாது, அதனால் ஸ்டேட்ஸ்சில் உள்ளவற்றை எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
மறைந்துள்ள வாட்ஸ்அப் ஸ்டேடஸ் போல்டரை வெளிபடுத்தும் முறை
  • உங்கள் ஆண்ட்ராய்டு போனில் ஸ்டேடஸ் அனைத்தும் ஒரு போல்டரில் சேவ் ஆகும் ஆனால் அவை கேலரியில் தெரிவதில்லை காரணம், அவை தெரியாதவாறு மறைக்கப்பட்டிருக்கும்.
  • முதலில் உங்கள் பைல் மேனஜருக்கு சென்று அதில் வாட்ஸ்அப் போல்டரை திறக்கவும். அதனுள் உள்ள மீடியா -> .ஸ்டேட்டசஸ் பகுதிக்கு செல்லவும்.
  • இந்த .ஸ்டேட்டசஸ் போல்டரில் தான் அனைத்து ஸ்டேடஸ் புகைப்படம் மற்றும் வீடியோ போன்றவை சேவ்-ல் இருக்கும்.
  • .ஸ்டேட்டசஸ் இந்த போல்டரை ரீநேம் செய்து அதன் முன்னால் உள்ள ஒரு புள்ளியை நீக்கி பின்னர் சேவ் செய்யவும், அவ்வளவு தான் உங்கள் வாட்ஸ்ஆப் ஸ்டேடஸ் அனைத்தும் உங்கள் கேலரிக்கு வந்து விடும்.
  • கேலரியிளிருந்து உங்கள் விருப்பமான ஸ்டேடஸ்-சினை எடுத்து நீங்கள் பயன்படுத்தி கொள்ள முடியும்.
ஸ்க்ரீன் ஷாட் முறை
  • இந்த முறை மிக எளிய முறை உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை ஸ்டேட்டஸ்சிலிருந்து எளிதில் உங்கள் போன் மூலம் ஸ்க்ரீன் சாட் எடுத்து கொள்ள முடியும்.
  • அல்லது ப்ளேஸ்டோரில் ஸ்க்ரீன் சாட் மற்றும் ஸ்க்ரீன் ரெக்கார்டிங் போன்ற செயலிகள் உள்ளன அவற்றை பதிவிறக்கம் செய்து ஸ்டேட்டஸ்சினை டவுன்லோட் செய்ய முடியும்.
ஸ்டேடஸ் பதிவிறக்கம் செய்யும் செயலி 
  • ஸ்டேடஸ் பதிவிறக்கம் செய்வதெற்கென சில பிரத்யேகமான செயலிகள் ப்ளேஸ்டோரில் உள்ளன அவற்றை உங்கள் போனில் நிறுவி உங்களுக்கு பிடித்த ஸ்டேட்டஸ்சினை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்.

Post a Comment

0 Comments