லட்சக்கணக்கான புகைப்படங்கள் பலராலும் பகிரப்படும் பிரபலமான சமூக வலைதளங்களில் இன்ஸ்டாகிராமும் ஒன்றாக உள்ளது. இந்த செயலியில் அனைவரும் புகைப்படங்களை பதிவிட முக்கிய காரணம் இதில் நமது புகைப்படங்களை மெருகேற்றும் அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் இதனுள் எளிதில் ஈர்க்கப்படுகின்றனர். அதேபோல் இதில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களை எளிதில் நம்மால் பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பின்வரும் செயல்முறைகள் மூலம் இதில் உள்ள புகைப்படங்களை பதிவிறக்கம் செய்ய முடியும். அது எப்படி என்று பார்க்கலாம்.
இன்ஸ்டாகிராமில் நமக்கு பிடித்த புகைப்படங்களை டெஸ்க்டாப் பிரவுசரில் எப்படி பதிவிறக்கம் செய்யலாம் என காண்போம் :
- முதலில் எந்த புகைப்படம் பதிவிறக்கம் செய்ய வேண்டுமோ அதன் ப்ரோபைல் பகுதிக்கு செல்லவும்.
- இப்பொழுது அந்த பக்கத்தின் URL அதாவது அந்த பக்கத்தின் லிங்கை காப்பி செய்யவும்.
- காப்பி செய்த லிங்கை மற்றொரு பிரவுசர் பக்கத்தில் பதிவிட்டு உள் செல்லவும்.
- தற்பொழுது அந்த புகைப்படம் உள்ள ப்ரோபைல் ஓபன் ஆகும்.
- இப்பொழுது புகைப்படத்தில் ரைட் கிளிக் செய்து ‘Open Image in a New Tab’ கொடுக்கவும்.
- இப்போது அந்த புகைப்படம் மட்டும் தனியாக திறந்திருக்கும். புகைப்படம் உள்ள பக்கத்தில் அதன் லிங்கில்(URL) ‘s150x150′ என்பதை மட்டும் நீக்கிவிட்டு என்ட்டர் தட்டவும்.
- அவ்வளவு தான் புகைப்படத்தின் முழு அளவும் உங்களுக்கு கிடைத்து விடும், இப்பொழுது ரைட் கிளிக் செய்து டவுன்லோட் இமேஜ் என்பதை கொடுக்கவும், இதன் பின்னர் புகைப்படம் பதிவிறக்கம் செய்யப்பட்டு விடும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள டிப்சை பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
0 Comments