பெரும்பாலானோர் தனது வீட்டை அல்லது அலுவலகத்தை கேமரா மூலம் கண்காணிக்க நினைப்பார்கள். ஆனால் அதற்கு அதிகமாக செலவாகும் என நினைத்து கேமராவை வைக்காமலே விட்டு விடுவார்கள். எந்த வித செலவும் இல்லாமல் உங்கள் கணிணியில் உள்ள வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள கேமராவை எளிதில் சிசிடிவி கேமராவாக எளிதல் மாற்றிவிடலாம்.
இதை செய்வதற்கு ‘yawcam’ என்ற மென்பொருளை நாம் பயன்படுத்திக்கொள்ளலாம். இதில் மகிழ்ச்சியான செய்தி என்னவெனில் இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம் தான். எனவே எந்த செலவும் நமக்கு இல்லை. இப்போது கணிணி வெப்கேமரா அல்லது லாப்டாப்பில் உள்ள கேமராவை சிசிடிவி கேமராவாக மாற்றும் வழிமுறையை பார்ப்போம்.
வழிமுறை-1: முதலில் Yawcam என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இணையதளம்மூலம் நேரடி வீடியோவை எளிமையாக பார்க்க முடியும். மேலும் இணைய இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது என உறுதி செய்யவேண்டும்.
வழிமுறை-2: Yawcam-ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும், அதன்பின்பு வேப்கேம் இயக்க கணினியில் டிரைவர்கள் தேர்வுசெய்து அவற்றை இயக்க வேண்டும். பின்பு வேப்கேம் சரியாக பொருத்தியிருப்பதை பார்க்க வேண்டும்.
வழிமுறை-3: அடுத்து Yawcam-ஆப் பயன்பாட்டில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து நீங்கள் பயன்படுத்த விரும்பும் கேமராவைத் தேர்வுசெய்யவும். அதன்பின்பு வீடியோவிற்கென தனி பீரிவியு திரையை காண முடியும்.
வழிமுறை-4: பின்னர் வெப்கேமராவில் உள்ள மெனுவில் கிளிக் செய்து மோஷன் கண்டறிதல் ‘motion detection’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். அவ்வாறு செய்யும்போது உங்கள் கேமராவில் உள்ள மோஷன்களை காணமுடியும்.
வழிமுறை-5: அதன்பின்பு வெப்கேமராவில் உள்ள செட்டங்கிஸ் கிளிக் செய்து Action tab-ல் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுக்கவும். நீங்கள் மின்னஞ்சல் எச்சரிக்கைகள் மூலம் தொலைவில் இருக்கும்போது கூட உங்கள் வீட்டில் என்ன நடக்கிறது என்பதை எளிதாக கண்காணிக்க முடியும்.
இதில் கூடுதல் ஒரு வசதி என்னவெனில் சிசிடிவி கேமரா வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுின்றது என யாருக்கும்தெரியாது. எதோ கம்யுட்டர் என்றுதான் அனை வரும் நினைத்துக் கொள்ளவார்கள். இதனால் வீட்டில் கடையில் நடக்கும் உண்மை நிலையை யாருக்கும் தெரியாமல் நாம் கண்காணிக்கலாம்.
0 Comments