உலகின் பிரபல குறுந்தகவல் செயலியாக வாட்ஸ்அப் விளங்குகிறது. வாட்ஸ்அப் செயலியானது கால் செய்வதற்கும், குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பரிமாற்ற பெரிதும் உதவும் செயலியாக விளங்குகிறது. இதனால் இதன் மீதான மீதான மோகம் மக்களிடையே அதிகமாக காணப்படுகிறது.
அந்தவகையில் வாட்ஸ்அப் தற்போது உலகின் தவிர்க்க முடியாத செயலியாக உருவெடுத்துள்ளது. வாட்ஸ்அப்-ல் நாம் மேற்கொள்ளும் தகவல் பரிமாற்றம் பாதுகாப்பாக உள்ளதா என்ற அச்சம் தற்பொழுது எழுந்துள்ளது. ஆம்!
சமீபத்தில் லைஃப்ஹேக்கர் என்ற நிறுவனம் வாட்ஸ்அப்-ல் மேற்கொள்ளப்படும் தகவல்களை உளவு பார்க்கும் செயலி குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. இதிலிருந்து வாட்ஸ்அப் செயலியின் பாதுகாப்பு அம்சங்களில் அச்சம் எழுந்துள்ளது.
லைஃப்ஹேக்கர் நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின் படி சாட்வாட்ச் என அழைக்கப்படும் செயலியானது ஒருவர் ஆன்லைனில் இருக்கும் நேரம், உங்கள் மெசேஜை படித்தாரா இல்லையா என்ற தகவல், கடைசியாக எப்பொழுது ஆன் லைன் வந்தார் உள்ளிட்ட தகவல்களை வழங்குவாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் நீங்கள் உங்கள் வாட்ஸ்அப் செயலியில் உள்ள பிரைவசி பகுதியில் ரீட் ரெசிப்ட் அல்லது லாஸ்ட் ஸீன் போன்றவற்றை ஆப் செய்து வைத்திருந்தாலும் கூட சாட்வாட்ச் என்ற செயலி மூலம் உங்களை கண்காணிக்க முடியுமாம்.
இந்த சாட்வாட்ச் ஆப் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டேட்டஸ் அம்சத்தை பயன்படுத்தி மற்றவர்கள் எப்போது வாட்ஸ்அப் பயன்படுத்துகின்றனர் என்றும் இரு கான்டாக்ட்கள் சாட் செய்யும் தகவல்களை தெரிவிக்கும். மேலும் நண்பர்கள், குடும்பத்தார் அல்லது ஊழியர்களின் வாட்ஸ்அப் நடவடிக்கையை சாட்வாட்ச் மூலம் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தி உங்களுக்கு அறிமுகமானவர்களின் சாட் விவரங்களை மற்றவர்களுடன் ஒப்பிடும் வசதியும் இந்த செயலியில் உள்ளதாக சாட்வாட்ச் நிறுவன வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக லைஃப்ஹேக்கர் நிறுவனம் கூறியுள்ளது.
வாடிக்கையாளர்கள் விரும்பும் தகவல்களை வழங்க சாட்வாட்ச் செயலி 24 மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தி நெக்ஸ்ட் வெப் தெரிவித்துள்ளது. லைஃப்ஹேக்கர் அறிக்கையில் வெளியான மற்றொரு மோசமான தகவல் என்னவென்றால், சாட்வாட்ச் ஆப்பின், வெப் வெர்ஷனை உருவாக்கும் முனைப்பில் டெவலப்பர்கள் பணியாற்றி வருகிறார்களாம்.
இந்த சாட்வாட்ச் செயலியானது ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இயங்குதளங்களில் முதலில் வழங்கப்பட்டது. பின்னர் ஐஓஎஸ் நிறுவனம் இதனை தனது ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது.
ஐஓஎஸ் இந்த செயலியை நீக்கியது குறித்து எந்த தகவலும் வெளியிடவில்ல்லை. ஆனால் தற்பொழுது வரை பிளே ஸ்டோரில் இந்த செயலி கிடைக்கிறது என்பது கவனிக்க வேண்டிய விஷயம். ஆன்ட்ராய்டு பயன்படுத்துவோர் ரூ.140 செலுத்தி சாட்வாட்ச் செயலியை பயன்படுத்திகொள்ள முடியும்.
பேஸ்புக் நிறுவனத்தில் நிகழ்ந்த டேட்டா திருட்டு குறித்து தற்பொழுது கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா நிறுவனம் தகவல் வெளியிட்டது. இந்த அதிர்ச்சி தகவலுக்கு பிறகு மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர், இந்நிலையில் தற்பொழுது வாட்ஸ்அப் செயலியிலும் தகவல் திருட்டு நடக்கிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது இன்னும் மக்களை பீதிய அடைய வைத்துள்ளது.
வாட்ஸ்அப் செயலி, பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான செயலி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இந்த குறிப்பிட்ட ஆப்பை பிளாக் செய்யும் பணிகளை வாட்ஸ்ஆப் விரைவில் நிகழ்த்தும் என வாட்ஸ்அப் செயலியில் இருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது, இந்த விஷயம் ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இதே வாட்ஸ்அப் செயலியில் எண்ட்- டூ- எண்ட் என்க்ரிப்ஷன் (end-to-end encryption), செயல்திறன் மிக்க ஒரு அம்சமாக உள்ளது. இது என்னவென்றால் உங்கள் சாட்டை மூன்றாம் நபரால் கண்காணிக்க முடியாது என்பது தான்.
1 Comments
I got recommendations about Thomas on some random sites and never hesitated to contact him. He asked me for some few information about my wife’s device which I provided to him in less than 4 hours I was getting to see my wife's text messages, call logs, and as well as WhatsApp messages as they come into her phone. I got to know that she was cheating with my friend on WhatsApp while I was outta town working in Baltimore. Thomas provides Accurate results and can be trusted for 100% stealth so you can be sure the target won't notice a thing during and after the processes this is completely safe just in case you’re wondering, You can contact him via his email address; tomcyberghost@gmail.com Text, Call & WhatsApp +14049416785 My wife used to be a big time cheat, and I was curious about getting proofs about it for real then I saw rec.
ReplyDelete