தொலைந்த ஸ்மார்ட்போனில் உள்ள தகவல்களை அழிக்கும் முறை!!!

இன்று ஸ்மார்ட்போன் எந்த அளவிற்கு வேகமாக பரவி வருகிறதோ அதே வேகத்தில் தொலைந்து போகவோ அல்லது திருடப்படவோ செய்கின்றன. மற்ற பொருட்கள் தொலைந்தால் அந்த பொருளோடு போய்விடும். ஆனால் ஸ்மார்ட்போன் தொலைந்தால் அதில் உள்ள முக்கிய தகவல்கள் நமக்கு பெரும் நஷ்டத்தை கொடுக்கும்.
அதுமட்டுமின்றி நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள், வீடியோக்கள், வங்கி சார்ந்த தகவல்கள் போன்ற முக்கியத்துவம் வாய்ந்ததகவல்களை வேறு யாரும் தவறாக பயன்படுத்தினால் பெரும் பின்விளைவுகள் ஏற்படும். இந்நிலையில் ஸ்மார்ட்போன் தொலைந்து போனால் போகட்டும் அதிலுள்ள முக்கிய தகவல்களை அழிக்க வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால் அதற்கு பின்வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.
குறிப்பு: 
– தொலைந்து போன மொபிலில் உள்ள தகவல்களை அழிக்க ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் அம்சத்தை கொண்டு செய்ய இருக்கின்றோம். ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜரை ப்ரெளசரில் இயக்க, மொபைலில் இணைத்திருந்த கூகுள் அக்கவுண்ட்டில் ப்ரெளசர் மூலம் லாகின் செய்து கொள்ளவேண்டும்.
– ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் அம்சம் வேலை செய்வதற்கு உங்கள் மொபைல் டேட்டா அல்லது வைஃபை மூலம் தொலைந்துபோன மொபைல் இணைந்திருக்க வேண்டும்.
ஸ்டெப் 1: 
தொலைந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனினை டிராக் செய்ய முதலில் கணினி அல்லது லேப்டாப் மூலம்
ஆண்ட்ராய்டு டிவைஸ் மேனேஜர் என்ற தளத்தை ஓபன் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 2: 
பின் உங்களது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பதிவு செய்திருந்த கூகுள் அக்கவுண்ட் மூலம் லாக்-இன் (login) செய்ய வேண்டும்.
ஸ்டெப் 3: 
அங்கு நீங்கள் பயன்படுத்திய மொபைலின் பட்டியலை பார்க்க முடியும். ஒருவேலை ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைலை பயன்படுத்தியிருந்தால், வலது பக்கம் திரையின் மேல் காணப்படும் தொலைந்துபோன சாதனத்தை கிளிக் செய்ய வேண்டும்.
ஸ்டெப் 4: 
தொலைந்த ஆண்ட்ராய்டு மொபைல் இருக்கும் இடத்தை நீங்கள் காணலாம். உங்களது சாதனத்தை இங்கு பார்க்க முடியாமல் போனால், இறுதியாக சாதனம் இருந்த இடம் காண்பிக்கப்படும். பின்னர் கணினியின் வலது திரையின் மேல் மூன்று ஆப்ஷன்கள் தோன்றும். Sound, Lock and Erase
ஸ்டெப் 5:
இதில் ‘Erase” ஆப்ஷன் கிளிக் செய்தால் உங்கள் போனில் உள்ள அனைத்து முக்கிய டேட்டாக்களையும் அழித்துவிடும். அதுமட்டுமின்றி போன் ரீசெட் ஆகிவிடும். ஆனால் ஒருவேளை உங்கள் மெமரி கார்டில் ஏதாவது டேட்டாக்கள் வைத்திருந்தால் அதை அழிக்க முடியாது என்பதை தெரிந்து கொள்ளவும்.
ஸ்டெப் 6: 
Sound ஆப்ஷனை கிளிக் செய்தால் உங்களது சாதனம் இருந்த இடத்திலேயே சத்தத்தை ஐந்து நிமிடங்களுக்கு எழுப்பும். சாதனம் சைலன்ட் மோடில் வைக்கப்பட்டிருந்தாலும் இந்த அம்சம் வேலை செய்யும்.
ஸ்டெப் 7: 
‘Lock’ செய்யவேண்டும் என்றால் புதிதாக பாஸ்வேர்டு கொடுத்து, உங்கள் மாற்று தொடர்பு எண்ணையும் கொடுத்து லாக் செய்ய வேண்டும். அதன்பின் உங்கள் தொலைந்து போன மொபைலை வேறு யாரும் பயன்படுத்த முடியாது. அதையும் மீறி அவர் பயன்படுத்த வேண்டுமென்றால், உங்கள் மாற்று தொடர்பு எண் விவரத்தோடு ஒரு திரை தோன்றும். அதை கிளிக் செய்தால் உங்களுக்கு நேரடியாக அழைப்பு வரும்.
மேற்கண்ட வழிமுறைகள் மூலம் நீங்கள் தொலைத்த மொபைலில் உள்ள முக்கிய தகவல்களை அழித்து விட்டு நிம்மதியாக இருக்கலாம்.

Post a Comment

0 Comments