பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் முறை..!

இன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளம் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் பொழுது போக்கையும் தாண்டி இன்றியமையாத ஒரு விசயமாக மாறிவிட்டது.
இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த சமூக வலைத்தளம் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிக அவசியம். காரணம் உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் அனைத்தும் அதில் உள்ளது.
 உங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பாதுகாப்பாக உள்ளதா?
இன்று ஹேக்கர்கள் பலரும் சமூக வலைதளத்தை ஹேக் செய்து உங்கள் தனிப்பட்ட தகவல்களை திருட முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் உங்கள் சமூக வலைத்தளம் பாதுகாப்பாக உள்ளதா என்பதை நீங்கள் உறுதி படுத்திகொள்ள வேண்டும்.
ஒருவேளை உங்கள் சமூக வலைத்தளம் ஹேக் செய்யப்பட்டு விட்டால் அதனால் உங்கள் தகவல் திருடு போகும் மேலும் அதனால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சமூக வலைத்தளம் என்று குறிப்பிடுகையில் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவை அடங்கும், இவை தான் இன்று மக்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சரி உங்கள் பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா இல்லை யாரேனும் அதனை ஹேக் செய்து விட்டனரா என்பதை எவ்வாறு கண்டறியலாம் என்பதை கீழே விரிவாக காணலாம்.
ஃபேஸ்புக் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் முறை:-
– முதலில் உங்கள் பேஸ்புக் கணக்கை லாக் இன் செய்து செட்டிங் பகுதிக்கு செல்லவும்.
– அடுத்து செக்யூரிட்டி மற்றும் லாகின் பகுதிக்கு செல்லுங்கள்.
– பின்னர் நீங்கள் எங்கு இருந்து லாக் இன் செய்கிறீர்கள் என்பதை க்ளிக் செய்யுங்கள்
இதன் பின்னர் நீங்கள் எங்கு இருந்தெல்லாம் உங்கள் கணக்கை லாக் இன் செய்தீர்கள் என்ற தகவல் உங்களுக்கு கிடைக்கும்.
அந்த வரிசையில் உங்களுக்கு தெரியாத இடத்தில் இருந்து உங்கள் பேஸ்புக் கணக்கு லாக் இன் செய்யப்பட்டிருந்தால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
உடனே அவை அனைத்தையும் லாக் அவுட் செய்யவும். இவ்வாறு செய்வதன் மூலம் பின்னர் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும்.
இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் முறை:-
பேஸ்புக் போன்று இதில் லாக் இன் மூலம் கண்டறிய முடியாது. உங்கள் இன்ஸ்டாகிராம் நியூஸ் பீடில் உங்களுக்கு தெரியாத நபரின் பதிவுகளை நீங்கள் பார்த்திருப்பது போலவும் அதனை நீங்கள் லைக் செய்திருப்பது போலவும் உங்களுக்கு தெரிந்தால் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி உங்கள் இன்ஸ்டாகிராம் பாஸ்வோர்டை உடனே மாற்றவும். மேலும்
உங்கள் கணக்கில் லாக் இன் செய்ய கொடுக்கப்பட்டுள்ள பாதுகாப்பான லாகின் வசதியான டூ ஃபேக்டர் வசதியை பின்பற்றவும்.
 உங்கள் ஃபேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பாதுகாப்பாக உள்ளதா?
டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறியும் முறை:-
– உங்கள் டிவிட்டர் கணக்கை லாக் இன் செய்து செட்டிங்ஸ் மற்றும் பிரைவைசி பக்கத்திற்கு செல்லவும்.
– அடுத்து பிரைவைசி மற்றும் சேஃப்டி என்பதை கிளிக் செய்யவும்.
– அங்கு உங்களது டுவிட்டர் டேட்டா பக்கத்தை சோதனை செய்யவும் இங்கு உங்கள் கணக்கின் முழு விவரமும் இருக்கும்,
இதில் அக்கவுண்ட்ஸ் மற்றும் ஹிஸ்ட்ரி என்ற பகுதியிலும் ஆப்ஸ் மற்றும் டிவைசஸ் என்ற பகுதியிலும் உங்களுடைய போன், ஆப்ஸ்கள் மற்றும் பிரெளசர்களின் விபரங்கள் இருக்கும்
இங்கு நீங்கள் ஹேக் செய்யப்பட்டதை நீங்கள் கண்டரிந்தாலும் பேஸ்புக் போன்று உடனே நடவடிக்கை எடுக்க முடியாது. இருப்பினும் உங்கள் டிவிட்டர் கணக்கின் பாஸ்வேர்டை மாற்றுவதன் மூலம் நீங்கள் பாதுகாப்பை பெறலாம்.
டிவிட்டரிலும் இன்ஸ்டாகிராம் போல இரண்டு ஸ்டெப் லாக் இன் முறை உள்ளது இதனை பயன்படுத்தினால் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்க முடியும்.
பொதுவாக உங்கள் சமூக வலைதளங்களில் நுழையும்போது இரண்டு ஸ்டெப் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய லாக் இன் முறையை பயன்படுத்துங்கள்.
இவ்வாறு இரண்டு ஸ்டேப் லாக் இன் முறை பயன்படுத்துவதால் உங்கள் சமூக வலைத்தளம் பாதுகாப்பாக இருக்கும். இருப்பினும் ஹேக்கர்களிடம் இருந்து முழுவதும் தப்பிக்க முடியும் என்று கூற முடியாது.

Post a Comment

0 Comments