அட்மினை டிஸ்மிஸ் செய்யும் வசதி: வாட்ஸ்அப் புதிய அப்டேட்!

வாட்ஸ்அப் இந்தியாவில் இந்த செயலி இல்லாத ஸ்மார்ட்போனே இல்லை எனலாம் அந்த அளவிற்கு இதன் பயன்பாடு அதிகரித்துள்ளது.
வாட்ஸ்அப் செயலியானது கால் செய்வதற்கும், குறுந்தகவல்களை பரிமாறிக்கொள்ளவும், வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பரிமாற்ற பெரிதும் உதவும் செயலியாக வழங்கி வருகிறது.
மிகவும் தாமதமாகவே கிடைத்துள்ளது.!
இதனால் வாட்ஸ்அப் செயலி அன்றாட வாழ்வில் பயன்படும் ஒரு செயலியாக உருவெடுத்துள்ளது. இத்தகைய வாட்ஸ்அப் செயலி மக்களை மேலும் தனது பக்கம் ஈர்ப்பதற்காக புது புது அப்டேட்டுகளை கொடுத்த வண்ணம் உள்ளது.
மக்களை ஈர்ப்பதற்கும் செயல்பாடுகளை எளிதாக்கவும் இத்தகைய அப்டேட்டுகள், வாட்ஸ்அப்பிற்கு தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் சமீபத்தில், க்ரூப் டிஸ்கிரிப்சன் வசதி மற்றும் தவறுதலாக டெலிட் செய்த மீடியா பைல்-களை திரும்ப பெரும் வசதி போன்ற அப்டேட்டுகள் வழங்கப்பட்டது.
அந்தவகையில் தற்போது மேலும் ஒரு அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய அப்டேட்டை பொறுத்தவரையில் வாட்ஸ்அப் குரூப் நடத்துபவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
“டிஸ்மிஸ் அஸ் அட்மின்” இது தான் அந்த புதிய அப்டேட், அதாவது ஒரு குரூப்பில் உள்ள சக அட்மினை மற்றொரு அட்மின் நீக்கும் முறை. இதற்கு முன் ஒரு அட்மினை அட்மின் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டுமெனில் அவரை க்ரூப்பை விட்டு நீக்கி பின்னர் இணைக்க வேண்டும்.
இந்த செயல் முறையானது ஒரு நீண்ட செயல்முறையாக இருந்து வந்தது இதனை கருத்தில் கொண்ட வாட்ஸ்அப் இதனை எளிமை ஆக்க தற்பொழுது இந்த அப்டேட்டை வழங்கியுள்ள்ளது.
இந்த அம்சத்தை சோதிக்க, க்ரூப் இன்ஃபோ சென்று > மெம்பரின் ப்ரொபைல் விவரத்தை டாப் செய்யவும். பின்னர் பட்டியலிடப்படும் விருப்பங்களில் “டிஸ்மிஸ் அஸ் அட்மின்” விருப்பமும் காட்சிப்படும். அந்த விருப்பத்தை டாப் செய்ய குறிப்பிட்ட மெம்பரின் அட்மின் பதவி திரும்பப் பெறப்படும்.
தற்போதைய அப்டேட் மூலம் ஒரு சக அட்மினை அவரது அட்மின் பொறுப்பிலிருந்து எளிதில் நீக்க முடியும். முன்னரே எதிர்பார்க்கப்பட்ட இந்த அம்சமானது மிகவும் தாமதமாகவே கிடைத்துள்ளது. கடந்த ஜனவரி மாதமே இந்த அப்டேட் கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தான் வழங்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.117 என்ற வெர்சனில் இத்தகைய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது கூடிய விரைவில் அனைவர்க்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment

0 Comments