வாட்ஸ்அப் வியாபார பயன்பாட்டிற்காக புதிய செயலியை வெளியிட்டுள்ளது..!

பேஸ்புக் நிறுவனம் ஃபார் பிஸ்னஸ் என்ற புதிய செயலியை வெளியிட்டுள்ளது. இந்த செயலி அனைவராலும் வெகுவாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று, காரணம் இது பிரத்யேகமாக தொழில் செய்பவர்களுக்கென வடிவமைக்கப்பட்டது. இந்த செயலியும் வாட்ஸ் ஆப் போன்றே செயல்படும் ஆனால் இதன் பய்னபாடுகள் அனைத்தும் தொழில் சார்ந்ததாகவே இருக்கும் என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம்.
வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி வியாபாரம் செய்வோர் தங்களது வாடிக்கையாளர்களிடம் தங்களது தகவல்களை எளிதாக பரிமாறி கொள்ளும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் பயன்பாடுகள் குறித்த ஸ்க்ரீன் ஷாட்கள் மட்டுமே முன்னதாக இணையத்தில் வெளிவந்தது. இந்நிலையில் இதனை வெளியிட்டுள்ளதாக வாட்ஸ்அப் அதன் அதிகாரப்பூர்வ வலைப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் பயன்பாடுகள் குறித்து பார்க்கலாம்.
இந்த செயலியில் வாடிக்கையாளர்கள், குடும்பத்தினர்கள், நண்பர்கள் பணி ரீதியிலான பயன்பாடுகள் போன்றவற்றை தனி தனியாக பிரித்து பயன்படுத்தி கொள்ள முடியும். இந்த செயலியில் பிஸ்னஸ் ப்ரோஃபைல்ஸ், மெசேஜிங் டூல்ஸ், மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ், வாட்ஸ்அப் வெப் மற்றும் அக்கவுண்ட் டைப் போன்ற ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆப்சன்கள் எதற்கு பயன்படும் என்பதை பார்க்கலாம். பிஸ்னஸ் ப்ரோஃபைல்- இதில் வியாபாரம் சார்ந்த தகவல்களை பதிவிடும் வண்ணம் உள்ளது உதாரணமாக என்ன தொழில் என்ற விவரம், மின்னஞ்சல் முகவரி, தொலைபேசி எண், போன்றவை இடம் பெற்றுள்ளது.
மெசேஜிங் டூல்ஸ்- இதன் மூலம் உங்கள் வாடிக்கையாளர்களுக்கு எளிதில் பதில் அளிக்க முடியும். மேலும் நீங்கள் பிசியாக இருக்கும் போது தானாக ரிப்ளை செய்யும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
மெசேஜிங் ஸ்டாட்டஸ்டிக்ஸ்- இதில் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பிய தகவல்களை எத்தனை பேர் படித்துள்ளனர் மேலும் அது எதனை பேரிடம் வெற்றிகரமாக சென்றடைந்துள்ளது போன்றவற்றை துல்லியமாக கணிக்க முடியும்.
இந்த செயலி அனைவரும் எளிதில் பயன்படுத்தும்வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் ஃபார் பிஸ்னஸ் செயலி முதற்கட்டமாக இந்தோனேஷியா, இத்தாலி, மெக்சிகோ, லண்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் நாட்களில் மற்ற நாடுகளிலும் வெளியிடப்படவுள்ளது.

Post a Comment

0 Comments