உங்கள் வைஃபை-யை ஹேக் செய்து பயன்படுத்துபவர்களை கண்டறிவது எப்படி?

இணையம் அதி வளர்ச்சி அடைந்து வருகிறது. இணைய உலகில் நம்மை இணைத்துக்கொள்ள நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் ஒரு சாதனம் வைபை. முன்னதாக நாம் இணையம் பயன்படுத்த லேன்(LAN) பயன்படுத்தி வந்தோம் பின், விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக நமக்கு கிடைத்தது தான் இந்த வைபை.

நம்மில் பெரும்பாலானோர் தங்களுக்கென தனியாக வைபை வலையமைப்பை வைத்திருப்பர். அதில் நமக்கு தெரியாமல் யாரேனும் ஒரு மூன்றாம் நபர் நமது பாஸ்வர்டை கண்டறிந்து நமது வைபை-யினுள் உள்நுழையும் போது, நமது இணைய வேகம் நிச்சயம் குறையும்.

இவ்வாறு நமது இணைய வேகம் குறையும் போது தான் யாராவது நமது வைஃபை நெட்வொர்க்கை இரகசியமாக பயன்படுத்துகிறாரோ என்ற சந்தேகம் நமக்குள் எழும். ஆனால் என்ன செய்வது அது யாரென நம்மால் எளிதில் கண்டு பிடிக்க முடியாமல் திணறுவோம்.

ஆனால் உண்மையில் இது போன்று திருட்டுத்தனமாக நமது வைஃபை நெட்வொர்க்கை பயன்படுத்தினால் நம்மால் எளிதில் அதை கண்டு பிடிக்க முடியும். அது எவ்வாறு என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.

வைஃபை-யை திருட்டுத்தனமான பயன்படுத்தும் கருவிகளை கண்டறிவது எப்படி?
உங்கள் வைஃபையில் இணைக்கப்பட்ட கருவிகளை ஸ்கேன் செய்ய ஒரு மென்பொருளை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்தால் போதுமானது. இந்த செயல்முறை மிக எளிமையானது.

– முதலில் “Wireless network watcher” என்ற மென்பொருளை உங்கள் விண்டோஸ் கணிணியில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்யவேண்டும்.

– பின்னர் அந்த கணினியை உங்கள் வைஃபை நெட்வொர்க்குடன் இணைக்க வேண்டும்.



– அடுத்ததாக உங்கள் கணினியில் “Wireless network watcher” மென்பொருளை இயக்கி, “Start Scanning” என்பதை கிளிக் செய்யவும்.

– இந்த மென்பொருள் உங்கள் கணினியை முழுவதும் ஸ்கேன் செய்து முடிக்கும் வரை பொறுமையாக இருக்கவும்.

– ஸ்கேன் செய்து முடித்தவுடன் உங்கள் வைஃபை நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கருவிகளின் பட்டியல் அவற்றின் ஐ.பி முகவரியுடன் காட்டப்படும்.

இதன் மூலம் எவ்வளவு கருவிகள் உங்களின் வைஃபை-யை பயன்படுத்தியுள்ளன என்பதையும் அந்த வைஃபை பெயர் போன்ற தகவல்கள் நமக்கு கிடைக்கும்,வைஃபை பெயர் அதன் உரிமையாளர் பெயரைக் கூட கண்டறியலாம்.

உங்கள் வைஃபை நெட்வொர்க்கை பாதுகாக்க மேலே குறிபிட்டுள்ள செயல்முறை ஒரு பக்கம் இருக்க, இதை விட எளிதாக உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மாதம் ஒருமுறை மாற்றி பயன்படுத்தலாம்.

பொதுவாக வைஃபை நெட்வொர்க் வேகம் என்பது நம்மை சோதனைக்கு உள்ளாக்கும், சில நேரங்களில் இணையசேவை வழங்கும் நிறுவனங்களின் மீது தவறு இருக்கலாம். மற்ற நேரங்களில் மூன்றாம் நபர்களின் கைவரிசையாக தான் இருக்கும்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவி அவ்வபோது உங்கள் வைஃபை நெட்வொர்க்கை ஸ்கேன் செய்து பார்த்து கொள்ளுங்கள்.

Post a Comment

0 Comments