உங்க ஏரியா செய்தியைச் சொல்ல வருகிறது கூகளின் இந்த ஆப்..!

பிரபல சமூக வலைதமான ஃபேஸ்புக்கிற்கு போட்டியாக கூகள் நிறுவனம் ‘Bulletin’ எனும் புதிய அப்ளிக்கேஷனை உருவாக்கி சோதனையில் ஈடுபட்டு வருகிறது. செய்தி உலகில் தனக்கென ஒரு குறிப்பிட்ட இடத்தை பிடிக்க இந்த செயலியை கூகள் அறிமுகப்படுத்தி உள்ளது. உங்களுக்கும் ரிப்போர்டர் அல்லது பத்திரிக்கையாளர் ஆகும் கனவு இருந்தால் ‘Bulletin’ செயலி வழியாக அதனை நீங்கள் சாத்தியமாக்கலாம். நீங்கள் இந்த செயலியை பயன்படுத்தி முக்‌கிய நிகழ்வுகள் மற்றும் உள்ளூர் செய்திகளை பதிவு செய்திட முடியும்.
‘Bulletin’ ஆப் மூலம் உள்ளூர் செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் மூலம் செய்திகளை தெரிந்து கொள்வதுடன் நமது அருகாமையில் நடக்கும் செய்திகள், சுவாரசிய நிகழ்வுகளை செய்திகளாக புல்லட்டின் ஆப்பிற்கு அனுப்பவும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக ப்லோக்கோ (Blog) அல்லது வலைதலமோ (Website) நீங்கள் உருவாக்க தேவையில்லை.
விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள இந்த அப்ளிக்கேஷனில் செய்தியை எழுத்து பதிவாகவோ அல்லது படங்கள், வீடியோக்கள் மூலமாகவோ மக்கள் பதிவேற்றம் செய்ய முடியும். செய்திகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டுவரும் இளைஞர்களுக்கு இந்த ஆப் பயனுள்ளதாக இருக்கும் என கூறப்படுகிறது.
கூகுள் தேடலிலிருந்தும் புல்லட்டின் செய்திகளை தெரிந்து கொள்ள முடியும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த ஆப் ஆக்லாந்த், கலிஃபோர்னியா, நாஷ்வில் ஆகிய இடங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் ‘Bulletin’ செயலி, அண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் இயங்குதளத்தில் இலவசமாக கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments