வங்கியில் லாக்கர் கணக்கை திறக்கும் முன் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள்..!

தற்போதைய சூழ்நிலையில் வேலை காரணமாக புதிய நகரத்த்ற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. நாம் செல்லும் புதிய நகரத்தின் பாதுகாப்பு குறித்த எதுவுமே நமக்கு தெரியாது, இதுபோன்ற சமையங்களில் தங்களின் விலை மதிப்பு மிக்க நகைகள், மற்றும் பொருட்களைப் பாதுகாப்பதில் சிரமப்படுகின்றனர்.
ஒரு சில அதிர்ஷ்டசாலிகளுக்கே சொந்த ஊரில் வேலை கிடைத்து சொந்த பந்தங்களுடன் வசிக்கும் பாக்கியம் கிடைகிறது. சொந்த ஊரில் இருக்கும் போது இது போன்ற விலை மதிப்பு மிக்க நகைகள், மற்றும் பொருட்களைப் பாதுகாப்பதில் எந்தவித பதிப்பும் இல்லை என்று கூறலாம்.
பாதுகாப்புப் பெட்டகம்
வேலை தேடி வெளியூர் செல்லும் நபர்கள் தான் இதுபோன்ற பிரச்சனையில் சிக்குகின்றனர். இவ்வாறாக வெளியூர் செல்பவர்களின் பொருட்கள் கொள்ளை போன்ற சம்பவங்களை நாம் தினசரி வாழ்கையில் செய்தியில் படித்த வண்ணம் உள்ளோம்.
அதிலும் புதிதாக திருமணமான தம்பதிகள் தங்கள் மனைவியின் விலை மதிப்பு மிக்க நகைகள் மற்றும் பல்வேறு பொருட்களை பாதுகாப்பாக வைப்பதில் பெரும் சிக்கல் நிலவுகிறது.
பாதுகாப்புப் பெட்டகம்:-
ஒரு சிலர் தைரியமாக வீட்டிலே லாக்கர் வாங்கி இது போன்ற பொருட்களை பாதுகாப்பாக வைக்கின்றனர். நீங்க வசிக்கும் வீட்டிற்கே உத்திரவாதம் இல்லாத போது உங்கள் வீட்டினுள் இருக்கும் லாக்கருக்கு சொல்லவே வேண்டாம்,.
நாம் தினசரி வாழ்கையில் பல கொள்ளை சம்பவங்களை செய்திகளாக பார்க்கிறோம். இப்படி உள்ள சூழ்நிலையில் வீட்டில் பாதுகாப்பு பெட்டகம் வங்கி வைத்து நமது பொருட்களை பாதுகாப்பாக வைப்பது என்பது அவ்வளவு புத்திசாலிதனமான செயல் அல்ல.
மேலும் ஒருசிலர் அவர்களது வீட்டிற்கு காப்பீடு பெற்றுள்ளோம் எனவே வீட்டினுள் உள்ள பொருட்கள் பாதுகாப்பு குறித்த பயமில்லை என்று கூறுகின்றனர். ஒன்று நன்றாக புரிந்துகொள்ளுங்கள் காப்பீடு எப்போதும் இழந்த பொருட்களுக்கு உரிய இழப்பீட்டை மற்றுமே தரும் ஒருபோதும் பாதுகாப்பை தராது.
வங்கி லாக்கர்:-
சரி விலை மதிப்பு மிக்க பொருட்களை எவ்வாறு தான் பாதுகாப்பது என்ற கேள்வி நாம் அனைவருக்குமே வரும் அதற்கு தான் வங்கிகளில் லாக்கர் உள்ளது. இங்கு நமது பொருட்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்று நூறு சதவிகிதம் சொல்ல முடியாது.
குறிப்பாக வங்கிகள் லாக்கரில் உள்ள பொருட்களுக்கு உத்திரவாதம் தருவதில்லை இருப்பினும் வீட்டில் விலை மதிப்பு மிக்க பொருட்களை வைப்பதை விட வங்கி லாக்கரில் வைப்பது ஒரு நல்ல முடிவு.
வங்கித் தேர்வு:-
முதலில் நீங்கள் லாக்கர் கணக்கை திறப்பதற்கு முன் வங்கியை தேர்ந்தெடுக்க வேண்டும், சிலர் லாக்கர் கணக்கிற்கு தனியார் வங்கிகள் சிறந்தது என்று கூறுகின்றனர், வேறு சிலர் அரசு வங்கிகள் சிறந்தது என்று கூறுகின்றனர்.
லாக்கர் சேவை பொறுத்த வரையில் தனியார் மற்றும் அரசு இரண்டு வங்கிகளுமே சிறந்த பாதுகாப்பை வழங்குகின்றன என்பது எண்களின் தனிப்பட்ட கருத்து.
வங்கி லாக்கர் கட்டணம் மற்றும் பாதுகாப்பு ஒழுங்குமுறைகள்:-
நீங்கள் வங்கியை தேர்வு செய்த பிறகு லாக்கர் கணக்கிற்கு வசூலிக்கப்படும் கட்டணம் குறித்து அறிந்து கொள்ள வேண்டியது மிக அவசியம். ஒவ்வொரு வங்கியும் லாக்கர் கணக்கிற்கு வெவ்வேறு கட்டணங்களை வசூலிக்கின்றனர்.
வங்கிகள் பெரும்பாலும் தங்களது சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்களுக்கே லாக்கர் சேவை வழங்குகின்றனர் எனவே நீங்கள் குறிப்பிட்ட வங்கியில் லாக்கர் கணக்கை துவங்குவதற்கு முன் அங்கு சேமிப்பு கணக்கை திறக்க வேண்டியது அவசியம்.
முதன் முதலாக லாக்கர் வசதி பெரும் நபர் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில் லாக்கரின் வாடகைக்கு ஈடாக குறிப்பிட்ட வங்கி உங்களிடம் பாதுகாப்பு வைப்பு நிதியை வசூலிக்கும்.
எனவே அனைத்து வங்கிகளும் சேமிப்புக் கணக்குகளுடன் நிரந்தர வைப்பு நிதியையும் வலியுறுத்துகின்றனர். ஒருவர் மூன்று வருட லாக்கர் வாடகையை மட்டும் நிரந்தர வைப்பு நிதியாகச் செய்தால் போதுமானது.
ஒருவேளை நீங்கள் லாக்கருக்கு வாடகை செலுத்தவில்லை எனில் நிரந்தர வைப்பு நிதியில் இருந்து அந்த வாடகை எடுத்துகொள்ளப்படும். எனவே வங்கியில் லாக்கர் திறப்பதற்கு முன் அதுகுறித்து முழுமையாக அறிந்துகொள்வது மிக அவசியம்.
பாதுகாப்புப் பெட்டகத்தில் எப்பொழுதும் ஒரு கண் வைத்திருங்கள்:-
ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் உங்கள் பாதுகாப்பு லாக்கரை பாரவையிடுவது மிகவும் அவசியம். ஒருசில வங்கிகள் 6 மாதங்களில் ஒரு முறை அல்லது ஒரு ஆண்டில் குறைந்தபட்சம் 15 முறை உங்கள் லாக்கரை பார்வையிட வேண்டும் என வலியுறுத்துகின்றன.
வங்கி கொள்ளை
பிற முக்கியமானவை:-
வங்கிகளில் பாதுகாப்பு அம்சங்களான இரும்புக் கம்பி உடைய பாதுகாப்பு அறைகள், சி.சி.டி.வி வழியாக மின்னணு கண்காணிப்பு போன்றவை மற்றும் எச்சரிக்கை அழைப்புகள் உள்ளனவா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
நீங்கள் எப்போது உங்கள் லாக்கரை திறக்க சென்றாலும் உங்களுடன் வரும் வங்கி பணியாளர் வெளியே சென்றவுடேன் லாக்கரை திறக்கவும். லாக்கரில் வேலை முடிந்தவுடன் லாக்கரை ஒழுங்காக பூட்டி விட்டீர்களா என்பதை உறுதிபடுத்திகொள்ளவும்.
லாக்கரில் வைத்துள்ள பொருட்களின் பட்டியலை உங்களுடன் வைத்திருப்பது மிக அவசியம். நகைகளை அதனுடைய ரசிதுடன் வைத்திருக்க வேண்டும். இதன் மூலம் ஒருவேளை உங்களுக்கு இழப்பு ஏற்பட்டால் உங்களுடைய சொத்து மதிப்பு உங்களுக்கு தெரியவரும்.
நீங்கள் லாக்கரில் வைக்கும் ஒவ்வொரு பொருளையும் லேமினேட் செய்து வைத்திருக்க வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் அந்த ஆவணங்களின் நகலை எப்போதும் உங்கள் வசம் வைத்திருக்க வேண்டும்
லாக்கரில் மிகவும் மதிப்பு மிக்க முக்கியமான மற்றும் மிகவும் தேவையான ஆவணங்களை வைக்க வேண்டாம்.

Post a Comment

0 Comments