உங்கள் வியர்வையை கொண்டு உங்களின் மன அழுத்தத்தை கண்டறியும் பட்டை கண்டுபிடிப்பு ..!

சமீபத்தில் வெளிவரும் தொழில்நுட்பங்கள் அனைத்தும் மனிதருக்கு பயன்படும் வகையில் உள்ளது. அந்த வகையில் தற்போது உங்கள் வியர்வையை கொண்டு உங்கள் மன அழுத்தத்தை கண்டறியும் புதிய பட்டை ஒன்று ஒன்றை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நமது தோலில் ஒட்டிக்கொள்ளும் வகையில் சிறிய பட்டை ஒன்றை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
வியர்வையை கொண்டு மன அழுத்தத்தை கண்டறியும் பட்டை கண்டுபிடிப்பு.!
இதனை நமது தோலில் ஒட்டிக்கொண்டதும் நமது தோலில் உள்ள வியர்வையை உறிந்து கொண்டு வியர்வையில் உள்ள கார்டிசல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோனை நொடிபொழுதில் கண்டறிந்துவிடும்.
இந்த புதிய பட்டை வாட்டர் ப்ரூஃப் டெக்னாலஜி கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் இதனை எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்த முடியும்.
பொதுவாக மனித உடலில் கார்டிசல் அளவு நாள் முழுக்க இயற்கையாகவே ஏறி, இறங்கும் அந்த சூழ்நிலையில் வழக்கமான மனிதர்களின் உடலில் ஏற்படும் சோர்வு, மன அழுத்தம் போன்றவற்றை கண்டறிந்து அவரது அட்ரினல் சுரப்பி சீராக வேலை செய்கிறதா என மருத்துவர்கள் சோதனை செய்ய முடியும்.
தற்சமையம் உடல் சோர்வு மற்றும் மன அழுத்தம் போன்றவற்றை கண்டறிய பயன்படுத்தப்படும் மருத்துவ சோதனைகளின் முடிவுகளை தெரிந்துகொள்ள பல நாள் காத்திருக்க வேண்டியிருக்கும்.
அந்தவகையில் பயனர்கள் தற்போது புதிதாக கண்டு பிடிக்கப்பட்டுள்ள இந்த பட்டையை தங்களின் தோலில் ஒட்டிக்கொண்டு அதனை மற்றொரு சாதனத்துடன் இணைத்து கொண்டால் நொடி பொழுதில் அவர்களது மன அழுத்தம், சோர்வு போன்றவற்றின் விவரங்களை அறிந்துகொள்ள முடியும்.
இதன் சிறப்பம்சம் என்னவெனில் இதனை தோலில் ஒட்டிக்கொண்டதும் நமது வியர்வையை உறிந்துகொண்டு அதில் உள்ள மன அழுத்தத்தை ஏற்படுத்தும் கார்டிசல் அளவை நொடி பொழுதில் கண்டு பிடித்துவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது வரை இந்த பட்டை சோதனை முறையில் நடைமுறையில் உள்ளது, சோதனை முடிந்து அதிகாரப்பூர்வமகா வெளிவந்தவுடன் இதனை மனிதர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது மன நிலை சீராக உள்ளத என்பதை அறிந்துகொள்ள முடியும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த பட்டை செவ்வக வடிவில் நீட்டத்தக்க சென்சார் மற்றும் மெம்பிரேன் கார்டிசலுடன் இணைந்து கொள்ளும் வகையில் ஆராய்ச்சியாளர்கள் இதனை வடிவமைத்துள்ளனர்.
இதனை தோலில் ஒட்டிகொண்டதும் இதில் உள்ள சிறு துளைகள் வழியே வியர்வை உறிஞ்சப்படுகிறது. மேலும் இதில் உள்ள வாட்டர்ப்ரூப் டெக்னாலஜி இந்த பட்டையை பழுதடையாமல் பார்த்துக்கொள்கிறது.
சோதனைமுறையில்
மேலும் இந்த பட்டையில் உள்ள நீர்த்தேக்கம் போன்ற பகுதியில் உங்களது வியர்வை சேமிக்கப்படும், இதன் மேல் கார்டிசலை உணரும் சவ்வு பொருத்தப்பட்டுள்ளது. கார்டிசலை உணரும் சவ்வு தான் உங்களது மன அழுத்தத்தை கண்டறியும்.
இந்த பட்டை எப்போது அதிகாரப்பூர்வமகா வெளிவரும் என்று எந்த தகவலும் இல்லை. இந்த சாதனம் நிச்சயம் பயனுள்ள வகையில் இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

Post a Comment

0 Comments