நம்மில் பெரும்பாலோனோர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகிறோம், குறுஞ்செய்தி அனுப்புவதற்கும், புகைப்படம் அல்லது வீடியோ அல்லது வீடியோ காலிங் போன்றவற்றிற்கு இந்த வாட்ஸ்அப் செயலி பயன்பட்டு வருகிறது.
வாட்ஸ்அப் செயலிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது என்பதை புரிந்துகொண்ட வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புது புது அப்டேட்டுகளை வழங்கிய வண்ணம் உள்ளது.
![à®à®µà¯à®µà®¾à®±à¯ à®à®µà¯à®©à¯à®²à¯à®à¯ à®à¯à®¯à¯à®¯ வà¯à®£à¯à®à¯à®®à¯](https://tamil.gizbot.com/img/2018/07/whatsapp-background-rdhj-top-hy-1531308116.jpg)
அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப் நிறுவனம் எப்போது பேஸ்புக்-கின் கட்டுப்பாட்டிற்குள் சென்றதோ அன்றிலிருந்து புது புது அப்டேடுகள் தொடர்ந்து வந்த வண்ணம் தான் உள்ளது.
சமீபத்தில் கூட வட்ஸ்அப்பில் வதந்திகள் பரவுவதை தவிர்க்க புதிய சிறப்பம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. அனைவரின் மத்தியிலும் இந்த சிறப்பம்சம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த வகையில் தற்போது மற்றுமொரு புதிய சிறப்பம்சத்தை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது இது வரை கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது வாட்ஸ்அப் வெப்-ஐ பயன்படுத்தி வந்தோம் இனிமேல் வாட்ஸ்அப் வெப் பயன்படுத்தாமலே கணினியில் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.
எந்நேரமும் நமது மொபைலில் வாட்ஸ்அப் பயன்படுத்தி வரும் நாம் எதோ ஒரு சூழ்நிலையில் கணினியிலும் வாட்ஸ்அப் பயன்படுத்த வேண்டிய நிலைமை வரலாம். இதனை எளிதாக்கும் வகையில் தான் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது இந்த புதிய அம்சத்தை வெளியிட்டுள்ளது.
வாட்ஸ்அப் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து வாட்ஸ்அப் மென்பொருளை வெளியிட்டுள்ளது. இந்த வாட்ஸ்அப் மென்பொருள் மூலம் கணினியிலும் வாட்ஸ்அப் பயன்படுத்த முடியும்.
இந்த புதிய வாட்ஸ்அப் மென்பொருளை ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
புதிய வாட்ஸ்அப் மென்பொருள் பயன்படுத்த விண்டோஸ் 8.1 இயங்குதளம் அல்லது அதற்கும் பின் வெளியிடப்பட்ட இயங்குதளம், மேக் ஐஓஎஸ் எக்ஸ் 10.9 அல்லது அதற்கும் பின் வெளியிடப்பட்ட இயங்குதளத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மென்பொருள் பயன்படுத்து முறை:-
– முதலில் உங்கள் கணினியின் பிரவுசரினை திறக்கவும்.
– முதலில் உங்கள் கணினியின் பிரவுசரினை திறக்கவும்.
– பின்னர் https://www.whatsapp.com/download இந்த லிங்கை உங்கள் பிரவுசரில் திறக்கவும்.
– அடுத்ததாக [click on download for Windows (64-Bit)] என்பதை கிளிக் செய்யவும்.
– தற்போது உங்கள் பிரவுசரில் WhatsApp.exe என்ற வாட்ஸ்அப் மென்பொருள் டவுன்லோட் ஆக துவங்கும். டவுன்லோட் முடியும் வரை காத்திருக்கவும்.
– டவுன்லோட் முடிந்ததும் WhatsApp.exe என்பதை இன்ஸ்டால் செய்யவும்.
– பின்னர் வாட்ஸ்அப் மென்பொருளை திறக்கவும், திறந்ததும் கணினி திரையில் கியூ.ஆர். கோடு (QR code) தெரியும்.
– பின்னர் உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் வெப் ஆப்ஷனை க்ளிக் செய்து அந்த கியூ.ஆர்.கோடினை ஸ்கேன் செய்யவும் அவ்வளவு தான்.
![வாà®à¯à®¸à¯à®
ப௠வà¯à®ªà¯ à®à®©à¯à®±à®¿à®¯à¯à®®à¯ à®à®®à¯à®ªà¯à®¯à¯à®à¯à®à®°à®¿à®²à¯ வாà®à¯à®¸à¯à®
ப௠பயனà¯à®ªà®à¯à®¤à¯à®¤à®²à®¾à®®à¯.!](https://tamil.gizbot.com/img/2018/07/wats-pou-1531308424.jpg)
ஐஓஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் மென்பொருள் பயன்படுத்து முறை:-
– முதலில் உங்கள் கணினியின் பிரவுசரினை திறக்கவும்.
– முதலில் உங்கள் கணினியின் பிரவுசரினை திறக்கவும்.
– பின்னர் https://www.whatsapp.com/download இந்த லிங்கை உங்கள் பிரவுசரில் திறக்கவும்.
– அடுத்ததாக Download for Mac OS X 10.9 and higher என்பதை கிளிக் செய்யவும்.
– தற்போது உங்கள் பிரவுசரில் WhatsApp.exe என்ற வாட்ஸ்அப் மென்பொருள் டவுன்லோட் ஆக துவங்கும். டவுன்லோட் முடியும் வரை காத்திருக்கவும்.
– டவுன்லோட் முடிந்ததும் WhatsApp.exe என்பதை இன்ஸ்டால் செய்யவும்.
– முதன்முறை இன்ஸ்டால் செய்யும் போது, செயலி அப்ளிகேஷன்ஸ் ஃபோல்டரில் வாட்ஸ்அப்-ஐ சேர்த்து, டெஸ்க்டாப் டாக்கில் வைக்க வேண்டுமா என்ற ஆப்ஷன் திரையில் தெரியும்.

0 Comments