சமீப காலமாக கூகுள் நிறுவனம் மக்களுக்கு பெரிதும் உதவும் வகையில் பல்வேறு தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது. கூகுள் வழங்கும் அனைத்து தொழில்நுட்பங்களும் மக்களுக்கு பயன்படும் வகையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
கூகுள் நிறுவனம் தற்போது செயற்கை தொழில்நுட்பம் மீது மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது. செயற்கை தொழில்நுட்பத்தை அன்றாட வாழ்வில் நடைமுறைபடுத்தி வருகிறது.
அந்தவகையில் தற்போது ஒரு புதிய தொழிநுட்பத்தை கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் உங்களுக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் தொல்லை தரும் அழைப்புகளை தடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![à®à¯à®à¯à®³à¯ நிறà¯à®µà®©à®®à¯:](https://tamil.gizbot.com/img/2018/07/googlesphoneapp-gap-1531720286.jpg)
சமீப காலமாக நமது தொலைபேசிக்கு வரும் தேவையற்ற அழைப்புகள் மற்றும் தொல்லை தரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனை புரிந்து கொண்ட கூகுள் இதனை தடுக்க தற்போது ஒரு புதிய தொழிநுட்பத்தை வெளியிட்டுள்ளது.
இதுபோன்ற தொல்லை தரும் அழைப்புகளில் இருந்து தப்பிக்க ஏற்கனவே பிளே ஸ்டோரில் ஏகப்பட்ட செயலிகள் உள்ளன இருந்து இந்த பிரச்னை ஓய்ந்தபாடில்லை.
எனவே இந்த பிரச்சனையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் தற்போது போன்(Phone) என்ற செயலியை வெளியிட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் ஏற்கனவே போன் செயலியில் தேவையற்ற அழைப்புகளை அதாவது ஸ்பேம் அழைப்புகளை கண்டறியும் சிறப்பம்சத்தை போன் செயலி பீட்டா வெர்சனில் சோதனை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
தற்சமையம் இந்த பீட்ட சோதனை நிறைவடைந்து ஸ்பேம் அழைப்புகளை கண்டறியும் அப்டேட் போன் செயலியில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளை தடுக்கும் வழிமுறைக்கு காலர் ஐடி மற்றம் ஸ்பேம் பாதுகாப்பு (Caller ID and Spam Protection) என்று பெயரிட்டுள்ளது.
கூகுளின் இந்த புதிய செயலி தானாக தேவையற்ற அழைப்புகளை எளிதில் கண்டறிந்து அவற்றில் இருந்து உங்களுக்கு நிம்மதி வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
![பà¯à®©à¯ ரிà®à¯ à®à® வà¯à®£à¯à®à®¾à®®à¯ à®à®©à®¿à®²à¯](https://tamil.gizbot.com/img/2018/07/googlesphoneapp-ok-1531720313.jpg)
மேலும் இந்த புதிய செயலி ஸ்பேம் கால் அழைப்புகளை தானாக கண்டறிந்து அவற்றை வாய்ஸ்மெயிலுக்கு அனுப்பிவிடும் என்று கூறப்படுகிறது.
மேலும் உங்கள் போனில் உள்ள போன் செயலியில் காலர் ஐடி மற்றும் ஸ்பேம் ப்ரோடக்ஷன் ஆன் செய்யப்பட்டு இருப்பின் உங்களுக்கு அழைப்பு விடுப்பவர்களின் முழு விவரத்தையும் தெரிந்துகொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
முகவரி இல்லாத வியாபார மையங்கள் மற்றும் ஸ்பேம் அழைப்புகள் போன்றவற்றை போன் செயலி தானாக கண்டறிந்து உங்களுக்கு எச்சரிக்கை வழங்கும் என கூகுள் சப்போர்ட் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
போன் செயலியில் இந்த சிறப்பம்சத்தை ஆன் செய்ய செட்டிங்க்ஸ் பகுதிக்கு சென்று அங்கு Caller ID and Spam என்பதை ஆன் செய்ய வேண்டும்.
மேலும் உங்களுக்கு வரும் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளின் போது உங்கள் போன் மணி அடிக்க வேண்டாம் எனில் filter suspected spam calls என்ற அம்சத்தை தேர்வு செய்ய வேண்டும்.
![à®à®¿à®µà®ªà¯à®ªà¯ நிற ஸà¯à®à®¿à®°à¯à®©à¯](https://tamil.gizbot.com/img/2018/07/googlesphoneapp-top-1531720331.jpg)
தற்போது தொலைபேசிக்கு வரும் தேவையற்ற ஸ்பேம் அழைப்புகளை கூகுள் போன் செயலி சிவப்பு நிறத்தில் காண்பித்தது எச்சரிக்கை செய்கிறது . கூகுளின் இந்த புதிய சிறப்பம்சம் மக்களுக்கு பெரிதும் பயனுள்ள வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments