விரைவில் பேஸ்புக் டேட்டிங் சேவை ..!

தற்போதைய சூழ்நிலையில் பேஸ்புக் பயன்படுத்தாத நபர்களே இல்லை எனலாம், அப்படியே இருந்தாலும் ஒரு சிலரே உள்ளனர். அந்த அளவிற்கு பேஸ்புக் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
பேஸ்புக் என்பது பிரபலமான சமூக வலைத்தளம் இதனை பயன்படுத்த எந்த வித வயது வரம்பும் கிடையாது. பெரியவர் முதல் சிறியவர் வரை பேஸ்புக்கில் தங்களை இணைத்துகொண்டு தங்களுக்கு பிடித்தமானவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து வருகின்றனர்.
இளைய தலைமுறையினர்:
பேஸ்புக் மூலம் தெரியாத நபர்களுடன் கூட நட்புறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இதனால் தான் இதன் மோகம் மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.
பேஸ்புக் மூலமாக எந்த நாட்டில் உள்ள முகம் தெரியாத நபருடன் கூட நட்புறவை வளர்த்து கொள்ள முடியும். இதே நட்புறவு காதலில் முடிந்த கதைகளும் நிறைய உள்ளது.
பேஸ்புக் மக்களின் மத்தியில் ஒரு இணைப்பு பாலமாக செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் எந்த நபருடனும் நட்புறவை மேம்படுத்த முடியும்.
குறிப்பக இளையதலைமுறையினர் தான் பேஸ்புக் பயன்படுத்தி வருகின்றனர். இதனை அறிந்துகொண்ட பேஸ்புக் நிறுவனம் சிங்களாக இருக்கும் நபர்களுக்கு நற்செய்தியை வெளியிட்டுள்ளது.
அதாவது பேஸ்புக்கில் சுமார் 200 மில்லியன் நபர்கள் சிங்கிளாக இருகின்றனர் என பேஸ்புக் தெரிவித்துள்ளது. அவர்களுக்கு எதாவது ஒரு வகையில் உதவி செய்யும் விதமாக பேஸ்புக்-கில் டேட்டிங் சேவையை வழங்கவுள்ளது பேஸ்புக்.
கடந்த மே மாதம் நடைபெற்ற பேஸ்புக் F8 டெவலப்பர்கள் நிகழ்வில் பேஸ்புக் இந்த டேட்டிங் சேவை குறித்து தகவல் வெளியிட்டது.
இந்நிலையில் தற்போது பேஸ்புக் டேட்டிங் சேவை சோதனை செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சேவை வந்து விட்டால் இனி எந்த ஒரு சிங்கிள் ஆணும், எந்த ஒரு சிங்கள் பெண்ணுடன் பிடித்திருந்தால் டேட்டிங் செய்ய முடியும். உண்மைலேயே சிங்களா இருப்பவர்களுக்கு இது ஒரு நற்செய்தி தான்.
தற்போது இந்த டேட்டிங் சேவையில் உள்ள நன்மைகள் தீமைகள் என்ன என்ன என்பது குறித்த சோதனை நடைபெற்று வருகிறது. கூடிய விரைவில் இந்த சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
பேஸ்புக் டேட்டிங் சேவையில் பயனர்கள் அவர்களது பேஸ்புக் ப்ரோஃபைலில் இருந்து வித்தியாசமான புதிய கவரும் வகையில் டேட்டிங் ப்ரோஃபைலை உருவாக்க முடியும்.
மேலும் குறிப்பிட்ட பயனர் தேர்வு செய்யும் அவரது விருப்பத்திற்க்கு ஏற்ப மற்ற ப்ரோஃபைல்களை வரிசைப்படுத்தப்படும். இதன் மூலம் எளிதில் தங்களுக்கான துணையை தேர்வு செய்து அவர்களுடன் டேட்டிங் செய்ய முடியும்.
எனினும் நீங்கள் இதிலிருந்து விலக நினைத்தால் அதற்கான ஆப்சனும் பேஸ்புக் டேட்டிங் சேவையில் வழங்கப்படவுள்ளது.
எது எவ்வாறாக இருப்பினும் இனி சிங்கிளா இருப்பவர்களுக்கு கொண்டாட்டம் தான். இருப்பினும் இந்த சேவை எப்போதிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் என்ற தகவல் எதுவும் இல்லை.

Post a Comment

0 Comments