சமீபத்தில் பேஸ்புக் நிறுவனம் தகவல் திருட்டு வழக்கில் சிக்கியது, பேஸ்புக் சேமித்து வைத்த நமது தகவல்களை வேறு ஒருவருக்கு கொடுத்ததாக இந்த வழக்கு தொடரப்பட்டது.
பேஸ்புக்-குடன் ஒப்பிடுகையில் கூகுள் நமது தகவல்களை அதிகமாக சேகரித்து வைக்கிறது. உதாரணமாக நீங்கள் யூடியூப்பில் பார்த்த வீடியோ, நீங்கள் சென்ற வலைத்தளம், உங்களது காண்டாக்ட் நம்பர்கள், நீங்கள் அன்றாட வாழ்வில் எங்கு எங்கு செல்கிறீர்கள், என்று உங்களை பற்றிய முழு தகவலையும் கூகுள் சேமித்து வைக்கிறது.
உங்கள் கூகுள் அக்கவுண்டில் செட்டிங்க்ஸ் பகுதியில் மை ஆக்டிவிட்டி(My Activity) என்ற பகுதியில் சென்று பாருங்கள் உங்களுக்கே வியப்பாக இருக்கும், உங்களை பற்றிய அவ்வளவு தகவல் கூகுள் மூலம் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.
சரி கூகுள் உங்களை பற்றி சேகரித்து வைத்துள்ள தகவல்களை அழிக்க முடியுமா என்றால் நிச்சயம் முடியும். கூகுள் சேகரித்த தகவலை எவ்வாறு அழிப்பது என்பது குறித்து கீழே விரிவாக காணலாம்.
ஆப்பிள் மற்றும் பேஸ்புக் போன்று கூகுளும் பயனர் தனியுரிமை கொள்கைகளை புதிய ஐரோப்பிய டேட்டா தனியுரிமை விதிக்கு ஏற்ப மாற்றியமைக்கவுள்ளது. கூகுளின் புதிய தனியுரிமை கொள்கைகள் மே மாதம் 25-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படவிருக்கிறது
கூகுளின் புதிய தனியுரிமை கொள்கை மூலம் கூகுள் சேகரிக்கும் தகவல்களையும் நீங்கள் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
கூகுள் ஹிஸ்டரியை அழிப்பது எப்படி?
– உங்கள் ஸ்மார்ட்போனிலோ அல்லது கணினியிலோ நீங்கள் கூகுள் மூலம் செய்த அனைத்து நடவடிக்கைகளும் கூகுளிடம் உள்ளது, இதனை நீங்கள் பார்கவோ அல்லது அழிக்கவோ முடியும்.
– உங்கள் கணினி அல்லது ஸ்மார்ட்போனில் கூகுள் செட்டிங் பகுதிக்கு சென்று அங்கு மை ஆக்டிவிட்டி(My Activity) என்பதை கிளிக் செய்வும்.
– இங்கு நீங்கள் செய்த தேடல்களின் விவரம், பயன்படுத்திய வலைத்தளங்கள் சார்ந்த விவரம், நீங்கள் எங்கு சென்றீர்கள் என்பது குறித்த முழு விவரங்களையும் பார்க்க முடியும்.
– இதில் நீங்கள் எந்த விவரத்தை அழிக்க வேண்டுமோ அதன் அருகில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்து அவற்றை அழிக்க முடியும்.
– இவ்வாறாக ஸ்கிரால் டவுன் செய்து முழு விவரத்தையும் அழிக்க முடியும்.
– மேலும் இதில் குறிப்பிட்ட தலைப்புகள் அல்லது கூகுள் சேவைகளை நீங்களே சர்ச் செய்து அதனை அழிக்க முடியும்.
– நீங்கள் குறிபிட்ட தலைப்பின் அனைத்து தகவல்களையும் அழிக்க டேட்டா ரேன்ஜ் ஆப்ஷனிலுள்ள ஆல் டைம் ஆப்ஷனை கிளிக் செய்து முழுமையாக அளித்து விட முடியும்.
மேலும் கூகுள் உங்களை பற்றி எந்த எந்த தகவலை மட்டும் சேகரிக்க வேண்டும் என்பதை நீங்களே செலக்ட் செய்ய முடியும். இதற்கு மை ஆக்டிவிட்டி(My Activity) பக்கத்தில் ஆக்டிவிட்டி கன்ட்ரோல் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
ஆக்டிவிட்டி கன்ட்ரோல் என்ற பக்கத்தில் கூகுள் உங்கள் தகவலை சேகரிப்பதை நீங்கள் நிராகரிக்கவும் முடியும். தொழில்நுட்பம் நிரந்த இந்த நவீன உலகில் நாம் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்பட்டு வருகிறோம். தொழில்நுட்ப வளர்ச்சி இன்னும் எந்த எல்லை வரை செல்லப்போகிறது என்று தெரியவில்லை.
1 Comments
Selvaraj
ReplyDelete